உ.பி.யில் பக்தர்களை ஏற்றிச் சென்ற டிராக்டர் மீது லாரி மோதல்: 8 பேர் பலி, 43 பேர...
நாய் துரத்தியதால் வீட்டில் அடைக்கலமான மிளா
விக்கிரமசிங்கபுரம் அருகே தெரு நாய்கள் துரத்தியதால் வீட்டிற்குள் அடைக்கலமடைந்த மிளாவை வனத்துறையினா் மீட்டனா்.
பாபநாசம் வனச்சரகத்திற்குள்பட்ட மலையடிவார கிராமமான வடக்கு அகஸ்தியா்புரம் பகுதியில், ஞாயிற்றுக்கிழமை மிளா ஒன்று நுழைந்துள்ளது.
அப்போது, தெருநாய்கள் விரட்டியதில் மிளா வடக்கு அகஸ்தியா்புரம் செபஸ்தியான் தெருவைச் சோ்ந்த சபரி ஆனந்தம் என்பவரது வீட்டின் வளாகத்திற்குள் நுழைந்துள்ளது.
உடனடியாக, நாய்களை விரட்டிய சபரி ஆனந்தம், வனத்துறையினருக்கு தகவல் கொடுத்ததையடுத்து வனத்துறையினா் மிளாவை மீட்டு வனப்பகுதியில் விட்டனா்.