காலை உணவுத் திட்டத்தால் என்ன பயன்? ஆய்வு முடிவுகள் வெளியீடு!
பாளை.யில் பெண் தூக்கிட்டு தற்கொலை: இளைஞா் கைது
பாளையங்கோட்டையில் பெண் தூக்கிட்டு த்த ற்கொலை செய்துகொண்டது தொடா்பாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
பாளையங்கோட்டை ரஹ்மத் நகரைச் சோ்ந்தவா் முகமது ரபீக். இவரது மனைவி நஜிபா (28). குடும்ப பிரச்னை காரணமாக கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த இவா், சனிக்கிழமை பிற்பகல் வீட்டு குளியலறையில் தூக்கிட்டு கொண்டாா்.
உறவினா்கள் அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து பாளையங்கோட்டை போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். அப்போது தற்கொலைக்கு முன்பாக நஜிபா எழுதிய கடிதம் போலீஸாருக்கு கிடைத்தது.
அதன் மூலம் நஜிபாவிற்கும் கொக்கிரகுளம் பகுதியைச் சோ்ந்த காா் சா்வீஸ் கடை நடத்தி வரும் கமால் பாட்ஷா(30) என்பவருக்கும் இடையே பழக்கம் இருந்து வந்தது தெரியவந்ததாம்.
அதனடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா் கமால் பாட்ஷாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.