செய்திகள் :

Madharaasi: "சிவகார்த்திகேயனை அப்படி சொல்லணும்னு எனக்கு ஆசை" - முருகதாஸ் ஓபன் டாக்

post image

சிவகார்த்திகேயன் நடிப்பில், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் `மதராஸி' படம் செப்டம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.

இப்படத்துக்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இந்த நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது.

முருகதாஸ் - சிவகார்த்திகேயன்
முருகதாஸ் - சிவகார்த்திகேயன்

இந்நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் குறித்து பேசிய முருகதாஸ், "இந்த படத்துக்கு தொடக்கப்புள்ளி எஸ்.கே தான். அவருடைய வளர்ச்சி எங்கயோ இருக்கு.

நாள்தோறும் பல கனவுகளோட வர்ற இளைஞர்களுக்கு எஸ்.கே நம்பிக்கையைக் கொடுத்திருக்கார். அவர் ரொம்ப கடினமான உழைப்பாளி.

குழந்தைகள் ஆடியன்ஸை பிடிப்பவர்கள் பெரிய ஆள்களாக வருவார்கள். அப்படி எஸ்.கே தொடக்கத்திலேயே குழ்ந்தைகளை பிடிச்சுட்டாரு.

இதைத் தாண்டி துப்பாக்கியை வேற அவர் கையில கொடுத்துட்டாங்க. அந்த துப்பாகியை ரொம்ப இறுக்கி பிடிச்சிருக்கார்.

எஸ்.கே-வோட டைமிங் எனக்கு அவர்கிட்ட ரொம்பவே பிடிச்ச விஷயம்.

அமிதாப், தலைவர், விஜய் சார்கிட்ட ஒரு sense of humour இருக்கும். அது எஸ். கே கிட்டையும் இருக்கு. அது எனக்கு ரொம்ப பிடிச்சது. அவருடைய சிரிப்பும் எனக்கு பிடிக்கும்." என்று கூறினார்.

முருகதாஸ்
முருகதாஸ்

அதைத்தொடர்ந்து, ''பத்து வருஷத்துக்கு முன்னாடி ஒருவரை இப்படி பார்க்கணும்னு ஒரு ஆசையை சொல்லியிருந்தீங்க. அது இன்னைக்கு நடந்திட்டு இருக்கு. அப்படி எஸ்.கே-வை எந்த இடத்துல பார்க்கணும்?" என்று முருகதாஸிடம் கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு முருகதாஸ், "எஸ்.கே ஃபேமிலி, காமெடி படங்கள் பண்ணிட்டாரு. அமிதாப் சார்தான் `Angry Young Man-னு' பெயர் வாங்கியவர். எனக்கு எஸ்.கே-வை அப்படி சொல்லணும்னு ஆசை" என்றார்.

Madharaasi: "இலங்கையில கேமராமேனாட விரல் தனியா வந்திடுச்சு" - முருகதாஸ் பகிர்ந்த சுவாரஸ்யம்

சிவகார்த்திகேயன் நடிப்பில், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் `மதராஸி' படம் செப்டம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. மதராஸி - சிவகார்த்திகேயன், ஏ.ஆர்.முருகதாஸ், அனிருத் இப... மேலும் பார்க்க

மதராஸி: "விஜய் சார் அப்படி நினைச்சிருந்தா துப்பாக்கி கொடுத்திருக்க மாட்டார்; அஜித் சார்..." - SK

சிவகார்த்திகேயன் நடிப்பில், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் `மதராஸி' படம் செப்டம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.இப்படத்துக்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இந்த நிலையி... மேலும் பார்க்க

Madharaasi: "முருகதாஸ் சார் படத்துல நடிக்கணும்னு சொன்னப்போ கலாய்ச்சாங்க" - சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் நடிப்பில், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் `மதராஸி' படம் செப்டம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.இப்படத்துக்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இந்த நிலையி... மேலும் பார்க்க

மதராஸி: "15 வருஷத்துக்கு அப்புறம் நான் தமிழ் படத்துல நடிக்க இதுதான் காரணம்" - பிஜு மேனன்

சிவகார்த்திகேயன் நடிப்பில், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் `மதராஸி' படம் செப்டம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.இப்படத்துக்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இந்த நிலையி... மேலும் பார்க்க

மதராஸி இசை வெளியீட்டு விழா: "நான் SK-வின் certified ஃபேன் கேர்ள்" - ருக்மினி