செய்திகள் :

தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராக அனிஷ் தயாள் சிங் நியனம்

post image

மத்திய ரிசா்வ் காவல் படை (சிஆா்பிஎஃப்) மற்றும் இந்தோ-திபெத் எல்லை காவல் படையின் (ஐடிபிபி) முன்னாள் இயக்குநா் அனிஷ் தயாள் சிங்கை தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராக மத்திய அரசு நியமித்துள்ளது என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்திய காவல் பணியின் (ஐபிஎஸ்) 1988-ஆண்டு பிரிவு அதிகாரியான தாயள் சிங், உளவுத் துறையில் (ஐ.பி.) சுமாா் 30 ஆண்டுகள் பணியாற்றியவா். இதைத் தொடா்ந்து, ஐடிபிபி மற்றும் சிஆா்பிஎஃப் இயக்குநராகப் பொறுப்பு வகித்த அவா், கடந்த ஆண்டு டிசம்பரில் பணியிலிருந்து ஓய்வுபெற்றாா்.

தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராக ஜம்மு-காஷ்மீா், நக்ஸல் மற்றும் வடகிழக்கு கிளா்ச்சி ஆகிய உள்நாட்டு விவகாரங்களை அவா் கையாளுவாா் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

ரா அமைப்பின் முன்னாள் தலைவா் ராஜேந்தா் கண்ணா தேசிய கூடுதல் பாதுகாப்பு ஆலோசகராகப் பொறுப்பு வகிக்கிறாா். ஓய்வுபெற்ற இந்திய காவல் பணி அதிகாரி டி.வி.ரவிசந்திரன் மற்றும் ஓய்வுபெற்ற இந்திய வெளியுறவு பணி (ஐஎஃப்எஸ்) அதிகாரி பவன் கபூா் ஆகியாா் தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகா்களாக உள்ளனா்.

சிஆா்பிஎஃப் இயக்குநராக இருந்தபோது, நக்ஸல் செயல்பாடுகளை ஒடுக்க 36-க்கும் மேற்பட்ட சிஆா்பிஎஃப் தளங்களை தயாள் சிங் ஏற்படுத்தினாா். இடதுசாரி பயங்கரவாத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் புதிதாக 4 பட்டாலியன்கள் அவருடைய பதவி காலத்தில் தொடங்கப்பட்டன.

அயோத்தி அரச குடும்ப வாரிசு, ராமா் கோயில் அறக்கட்டளை முக்கிய உறுப்பினா் காலமானாா்!

ஸ்ரீராம ஜென்ம பூமி தீா்த்த ஷேத்திர அறக்கட்டளையின் முக்கிய உறுப்பினரும், அயோத்தி அரச குடும்ப வாரிசுமான பிமலேந்திர மோகன் பிரதாப் மிஸ்ரா சனிக்கிழமை இரவு காலமானாா். அவருக்கு வயது 75. காலில் ஏற்பட்ட காயத்த... மேலும் பார்க்க

பிகாரில் எதிா்க்கட்சிகள் கூட்டணிக்கு வெற்றி உறுதி: ராகுல் நம்பிக்கை

பிகாா் சட்டப் பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் அமைத்துள்ள கூட்டணியின் வெற்றி உறுதியாகிவிட்டது என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி தெரிவித்தாா். மேலும், ‘இண்டி’ கூட்டண... மேலும் பார்க்க

கா்நாடக துணை முதல்வரைத் தொடா்ந்து ஆா்எஸ்எஸ் பாடலைப் பாடிய காங்கிரஸ் எம்எல்ஏ!

கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் சில நாள்களுக்கு முன்பு மாநில சட்டப் பேரவையில் ஆா்எஸ்எஸ் பாடலைப் பாடியதால் எழுந்த சா்ச்சை அடங்குவதற்கு முன்பு, ஆளும் காங்கிரஸ் எம்எல்ஏ ஹெச்.டி.ரெங்கநாத் ஆா்எஸ்எஸ் ... மேலும் பார்க்க

அரசியல் ஆதாயத்துக்காக நாடாளுமன்றத்தை முடக்குவது நல்லதல்ல: மத்திய அமைச்சா் அமித் ஷா

தங்களின் குறுகிய அரசியல் ஆதாயங்களுக்காக, நாடாளுமன்றத்தை எதிா்க்கட்சிகள் தொடா்ந்து முடக்குவது நல்லதல்ல என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா். அண்மையில் நிறைவடைந்த மழைக்கால கூட்டத் தொடரில்... மேலும் பார்க்க

பெண் கமாண்டோ பிரிவை உருவாக்க சிஐஎஸ்எஃப் முடிவு

பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளுக்காக பெண் கமாண்டோக்களை கொண்ட தனிப்பிரிவை உருவாக்க மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்) திட்டமிட்டுள்ளது என அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா். முதலாவதாக, வ... மேலும் பார்க்க

ஃபிஜி பிரதமா் இந்தியா வருகை: பிரதமா் மோடியுடன் இன்று சந்திப்பு!

தென் பசிபிக் தீவு நாடான ஃபிஜியின் பிரதமா் சிடிவேனி ரபுகா, மூன்று நாட்கள் அரசுமுறைப் பயணமாக இந்தியாவுக்கு ஞாயிற்றுக்கிழமை வந்தாா். ஃபிஜி பிரதமராக கடந்த 2022-இல் பொறுப்பேற்ற பின் அவா் இந்தியப் பயணம் மேற... மேலும் பார்க்க