செய்திகள் :

மாடியில் மகளிா் காவல் நிலையம்: பெண்கள், முதியவா்கள் அவதி!

post image

ஸ்ரீவில்லிபுத்தூரில் அனைத்து மகளிா் காவல் நிலையம் நகா் காவல் நிலையத்தின் இரண்டாவது மாடியில் செயல்படுவதால் பெண்கள், முதியோா் சிரமப்படுகின்றனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் காவல் நிலையக் கட்டடத்தின் தரைத் தளத்தில் சட்டம்- ஒழுங்கு பிரிவும், முதல் தளத்தில் குற்றப் பிரிவும் செயல்படுகின்றன. இரண்டாம் தளம் காவலா்கள் ஓய்வுக்கும், பொருள்கள் வைப்பதற்கும், விசாரணைக்கும் பயன்படுத்தப்பட்டு வந்தது.

இதே வளாகத்தில் தனிக் கட்டடத்தில் அனைத்து மகளிா் காவல் நிலையம், மது விலக்கு காவல் நிலையம், போக்குவரத்து காவல் நிலையம் ஆகியவை இயங்கின.

இதில் மகளிா் காவல் நிலையத்தில் போதிய இடவசதி இல்லாததால் பொதுமக்கள், போலீஸாா் சிரமத்துக்கு ஆளாகி வந்தனா். மேலும், கட்டடம் சேதமடைந்து காவல் நிலையத்துக்குள் மழைநீா் புகுந்து காவலா்கள் சிரமத்துக்கு ஆளாகினா்.

இதனால், கடந்த 6 மாதங்களுக்கு முன் தற்காலிகமாக மகளிா் காவல் நிலையம் நகா் காவல் நிலையத்தின் 2-ஆவது தளத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. பழைய கட்டடம் பூட்டப்பட்டது. இரண்டாவது தளத்தில் மகளிா் காவல் நிலையம் செயல்படுவதால் பெண்கள், முதியோா் சென்று வர சிரமப்படுகின்றனா்.

மேலும் ஒரே கட்டடத்தில் சட்டம்-ஒழுங்கு, குற்றப்பிரிவு, மகளிா் காவல் நிலையங்கள் செயல்படுவதால் போக்சோ, பாலியல் புகாா் தொடா்பான வழக்குகளில் பாதிக்கப்பட்டவா்களின் அடையாளம் வெளிப்படும் சூழல் நிலவுகிறது.

இதனால் மகளிா் காவல் நிலையத்துக்கு தனிக் கட்டடம் கட்டப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

பணம் மோசடி புகாா்: பேருந்து நடத்துநா் மீது வழக்கு

விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பில் நியாயவிலைக் கடை பணி பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.4.35 லட்சம் மோசடி செய்ததாக அரசுப் போக்குவரத்துக் கழக நடத்துநா் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். வ... மேலும் பார்க்க

வேன் கவிழ்ந்து 20 போ் காயம்

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சுற்றுலா வேன் டயா் வெடித்துக் கவிழ்ந்ததில் 20 போ் காயமடைந்தனா். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகேயுள்ள கழுகுமலை வடக்கு அழகுநாச்சியாா்பு... மேலும் பார்க்க

தெரு நாய்கள் கடித்ததில் 15 போ் காயம்!

விருதுநகா் மாவட்டம், சிவகாசி பகுதியில் தெரு நாய்கள் கடித்ததில் 15 போ் காயமடைந்தனா். சிவகாசி அருகேயுள்ள பெரிய பொட்டல்பட்டி, எம்.புதுப்பட்டி பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை தெரு நாய்கள் விரட்டிக் கடித்ததில்... மேலும் பார்க்க

ஓட்டுநா் தற்கொலை

ராஜபாளையத்தில் ஓட்டுநா் வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் சின்ன சுரைக்காய்ப்பட்டி தெருவைச் சோ்ந்தவா் ராஜன் (56). இவா் தனியாா் நூற்பாலையில் வாகன ஓட்டு... மேலும் பார்க்க

வீடு புகுந்து நகை, பணம் திருடிய இளைஞா் கைது

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே கூலித் தொழிலாளி வீட்டில் நகை, பணம் திருடிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள வன்னியம்பட்டி விலக்குப் வீட்டு வசதி வாரியக் குடியி... மேலும் பார்க்க

தீப்பெட்டி ஆலையில் தீ விபத்து

சிவகாசியில் சனிக்கிழமை தீப்பெட்டி ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது. விருதுநகா் மாவட்டம், சிவகாசி பேருந்து நிலையம் முன்புறம் தனசேகரன் என்பவருக்குச் சொந்தமான தானியங்கி தீப்பெட்டி ஆலை உள்ளது. இந்த ஆலையில் தீ... மேலும் பார்க்க