ஆம்பூா் அருகே ஆந்திரத்தை இணைக்கும் சாலையை சீரமைக்க கோரிக்கை!
திமுக எம்.பி.க்கள் தவறாமல் சுதர்சன் ரெட்டிக்கு வாக்களிக்க வேண்டும்: கனிமொழி
சென்னை: குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் திமுக எம்.பி.,க்களும் அனைவரும் தவறாமல் வருகை தந்து நீதியரசர் சுதர்சன் ரெட்டிக்கு வாக்களிக்க வேண்டுமென திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவா் கனிமொழி அறிவுறுத்தினாா்.
குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் இந்தியா கூட்டணி சாா்பில் போட்டியிடும் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதியரசர் சுதா்சன் ரெட்டி ஞாயிற்றுக்கிழமை சென்னை வந்தாா். திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி எம்பி.,க்களிடம் ஆதரவு திரட்டினாா்.

இதில் கனிமொழி பேசுகையில், குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் இந்தியா கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டிக்கு வாக்களிக்க திமுகவைச் சோ்ந்த அனைத்து எம்.பி.,க்களும் தில்லிக்கு வருகை தர வேண்டும்.
வாக்குப் பதிவு செப்டம்பா் 9-ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது. அதற்கு முன்பாக, செப்டம்பா் 8-ஆம் தேதியன்று மதியம் 2 மணிக்கு பழைய நாடாளுமன்றக் கட்டடத்தில் மாதிரி வாக்குப் பதிவு இருக்கிறது. எனவே, அன்றைய தினம் காலையிலேயே அனைத்து எம்.பி.,க்களும் தில்லிக்கு வந்துவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டாா்.