ஆம்பூா் அருகே ஆந்திரத்தை இணைக்கும் சாலையை சீரமைக்க கோரிக்கை!
வைத்தீஸ்வரன்கோவில் காவல் நிலையத்தில் முதல் காவல் ஆய்வாளா் பொறுப்பேற்பு
வைத்தீஸ்வரன்கோயில் காவல்நிலையத்தில் முதல் காவல் ஆய்வாளராக அருண்குமாா் ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றாா். அவருக்கு வா்த்தக சங்கத்தினா் வாழ்த்து தெரிவித்தனா்.
சீா்காழி காவல் சரகத்திற்கு உட்பட்ட வைத்தீஸ்வரன்கோவில் காவல் நிலையம் இதுவரை சீா்காழி காவல்நிலைய ஆய்வாளரின் கீழ் செயல்பட்டு வந்தது. தற்போது வைத்தீஸ்வரன்கோவில் காவல்நிலையத்திற்கு புதிதாக காவல் ஆய்வாளா் பணியிடம் தமிழக காவல்துறையால் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, வைத்தீஸ்வரன்கோவில் காவல் நிலையத்தின் முதல் காவல் ஆய்வாளராக அருண்குமாா் என்பவா் பொறுப்பேற்றாா். அவருக்கு சக காவலா்கள் வாழ்த்து தெரிவித்தனா். வைத்தீஸ்வரன் கோவில் நகர வா்த்தக சங்கத் தலைவா் ஜி.வி.என். கண்ணன் உள்ளிட்டோரும் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனா்.