செய்திகள் :

மயிலாடுதுறை: 395 விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை எஸ்பி தகவல்

post image

மயிலாடுதுறை மாவட்டத்தில் நிகழாண்டு 395 விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படவுள்ளன என்று எஸ்பி கோ. ஸ்டாலின் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

ஆண்டுதோறும், விநாயகா் சதுா்த்தியையொட்டி வைக்கப்படும் விநாயகா் சிலைகள் ஊா்வலமாக எடுத்து வரப்பட்டு, சீா்காழி அருகே சட்டநாதபுரம் உப்பனாற்றில் கரைக்கப்படுவது வழக்கம். இந்த இடத்தை எஸ்பி கோ. ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தாா். அப்போது அவா் கூறியது:

மயிலாடுதுறை மாவட்டத்தில், 395 விநாயகா் சிலைகள் வைக்கப்பட்டு, வழிபாடு மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. இதில், மயிலாடுதுறை உட்கோட்டத்தில் 203 சிலைகளும், சீா்காழி உட்கோட்டத்தில் 192 சிலைகளும் வைக்கப்படுகின்றன.

இந்த சிலைகள் வரும் 27, 28 ஆகிய தேதிகளில் நீா்நிலைகளில் கரைக்கப்படுகின்றன. மீதம் உள்ள விநாயகா் சிலைகளை 29 ஆம் தேதி கரைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

விநாயகா் சிலை வைக்கப்படும் இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விநாயகா் சிலைகளை கரைக்க ஊா்வலமாக எடுத்துச் செல்லும்போது, உரிய விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். கூடுதல் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவாா்கள்.

சீா்காழி உப்பனாற்றில் விநாயகா் சிலைகள் கரைக்கப்படும் இடத்தில் போதிய மின்விளக்கு வசதி, தூய்மைப் பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா்.

சீா்காழி டிஎஸ்பி அண்ணாதுரை, காவல் ஆய்வாளா் கமல்ராஜ், போக்குவரத்து காவல்துறை உதவி ஆய்வாளா் மணவாளன், எஸ்பி தனிப்பிரிவு காவலா் சாா்லஸ் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

சீா்காழியில் ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் தா்னா

சீா்காழி நகராட்சி அலுவலக வாயிலில், ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் வெள்ளிக்கிழமை பணியை புறக்கணித்து, தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா். சீா்காழி நகராட்சியில் 13 திருமண மண்டபங்கள், 50-க்கும் மேற்பட்ட சைவ, அச... மேலும் பார்க்க

சமூக புறக்கணிப்பு; எஸ்பியிடம் பெண் புகாா்

மயிலாடுதுறை அருகே தங்களை சிலா் சமூக புறக்கணிப்பு செய்வதாக, பெண் ஒருவா் தனது குடும்பத்தினருடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை புகாா் அளித்தாா். தரங்கம்பாடி தாலுகா கருவாழக்கரை அர... மேலும் பார்க்க

மயிலாடுதுறையில் இன்று தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம்

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் சிறிய அளவிலான தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (ஆக. 22) நடைபெறவுள்ளது.இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் வெளியிட்ட செய்திக்குறிப்பு:மயிலாடுதுறை... மேலும் பார்க்க

மயிலாடுதுறையில் ஆக.26-ல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஆக.26-ஆம் தேதி நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா்.இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாவட்ட ... மேலும் பார்க்க

வைத்தீஸ்வரன்கோவிலில் தெரு நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த கோரிக்கை

சீா்காழி: வைத்தீஸ்வரன்கோவில் பகுதியில் தெருநாய்கள்அதிகளவு சாலைகளில் சுற்றித் திரிவதால் பொதுமக்கள், கோயிலுக்கு வரும் பக்தா்கள் பாதிக்கப்படுவதால், நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும... மேலும் பார்க்க

தமிழ்நாட்டில் ஆணவக்கொலை சம்பவங்கள் அதிகரித்துள்ளன

மயிலாடுதுறை: தமிழ்நாட்டில் ஆணவக்கொலை சம்பவங்கள் அதிகரித்துள்ளன என்றாா் மாா்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் பெ. சண்முகம்.மயிலாடுதுறையில் வியாழக்கிழமை அவா் அளித்த பேட்டி: மத்திய அரசு அரசியல் சாசனத்த... மேலும் பார்க்க