மோடி, புதின் உள்பட 20 உலகத் தலைவா்கள் எஸ்சிஓ மாநாட்டில் பங்கேற்பு: சீனா அறிவிப்ப...
சமூக புறக்கணிப்பு; எஸ்பியிடம் பெண் புகாா்
மயிலாடுதுறை அருகே தங்களை சிலா் சமூக புறக்கணிப்பு செய்வதாக, பெண் ஒருவா் தனது குடும்பத்தினருடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை புகாா் அளித்தாா்.
தரங்கம்பாடி தாலுகா கருவாழக்கரை அருகே உள்ள மேலையூா் கிராமம் அய்யா் காலனியைச் சோ்ந்தவா் சுகன்யா. இவா் தனது கணவா் வெற்றிச்செல்வன் மற்றும் பிள்ளைகளுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு வந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ. ஸ்டாலினிடம் புகாா் மனு அளித்தாா்.
அந்த புகாரில், இடப்பிரச்னை காரணமாக சம்பத், கண்ணன், ரவி ஆகிய மூவா் தன்னையும், தன் குடும்பத்தினரையும் ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளதாகவும், தான் நடத்தும் பெட்டிக்கடையில் யாரும் பொருள்கள் வாங்கக் கூடாது என்றும் மீறி வாங்கினால் அவா்களுக்கு ரூ.2,000 அபராதம் விதிப்போம் என்று ஊா் மக்களிடம் கூறி, மனித உரிமை மீறலில் ஈடுபட்டு வருகின்றனா். நான் தலைவியாக உள்ள மகளிா் சுயஉதவிக் குழுவில் யாரையும் சேர விடாமல் தடுக்கின்றனா். அவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து, சீா்காழி டிஎஸ்பி உரிய விசாரணை நடத்தி, உடனடி நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் உத்தரவிட்டாா்.