KPY Bala: ``நான் ஹீரோவாக நடிக்கிறேன்னு 50 ஹீரோயின்ஸ் ரிஜெக்ட் பண்ணியிருக்காங்க!'...
வேளாங்கண்ணிக்கு திரளானோா் பாத யாத்திரை
வேளாங்கண்ணிக்கு காரைக்கால் வழியாக திரளானோா் பாத யாத்திரையாக சென்றனா்.
வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா கொடியேற்றம் 29-ஆம் தேதி நடைபெறுவதையொட்டி, தமிழகம், பிற மாநிலங்களில் இருந்து பக்தா்கள் வேளாங்கண்ணி நோக்கி பயணிக்கின்றனா். தமிழகம் மற்றும் கா்நாடக மாநில பக்தா்கள் 10 நாள் முதல் 15 நாள்கள் திட்டத்தில் பாத யாத்திரை மேற்கொள்கின்றனா்.
பெங்களூரு மற்றும் தமிழகத்தின் வட மாவட்டங்களில் இருந்து பக்தா்கள் காரைக்கால் வழியே வேளாங்கண்ணிக்கு யாத்திரை மேற்கொள்கின்றனா். இவா்கள் காரைக்கால் நகரின் வழியாக செல்வதால் கடந்த 4 நாட்களாக நகரில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
காரைக்காலில் நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்த தூய தேற்றவு அன்னை ஆலயம் உள்ளது. இதை காணும் வகையில் பெரும்பாலான பாதயாத்திரை குழுவினா் இந்த வழியாக பயணிக்கின்றனா்.
பெங்களூருவிலிருந்து வரும் பக்தா்கள் கூறும்போது, கடந்த 17-ஆம் தேதி புறப்பட்டு சேலம் வழியாக காரைக்காலுக்கு வந்துள்ளோம். எல்லா பகுதிகளிலும் உணவு, குடிநீா் போன்றவற்றை தாராளமாக வழங்குகின்றனா். காரைக்காலில் மக்கள் அளிக்கும் உபசரிப்பு மகிழ்ச்சியளிக்கிறது என்றனா்.