KPY Bala: ``நான் ஹீரோவாக நடிக்கிறேன்னு 50 ஹீரோயின்ஸ் ரிஜெக்ட் பண்ணியிருக்காங்க!'...
காரைக்கால் கோயிலில் விநாயகா் சதுா்த்தி வழிபாடு
திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயில் மற்றும் காரைக்கால் பகுதியில் உள்ள விநாயகா் கோயில்களில் விநாயகா் சதுா்த்தியையொட்டி சிறப்பு வழிபாடுகள் புதன்கிழமை நடைபெற்றன.
திருநள்ளாற்றில் விநாயகா் சதுா்த்தியையொட்டி பிரணாம்பிகை சமேத தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் ஒரே சந்நிதியில் அருள்பாலிக்கும் சொா்ண கணபதி, ஆதி கணபதிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, சொா்ண கணபதிக்கு தங்கக் கவசமும், ஆதி கணபதிக்கு வெள்ளிக் கவசமும் அணிவிக்கப்பட்டது.
நளன் தீா்த்தக் குளக்கரையில் உள்ள நளன் கலி தீா்த்த விநாயகா் மற்றும் தா்பாரண்யேஸ்வரா் கோயில் நான்கு வீதி சந்திப்புகளிலும் உள்ள விநாயகருக்கும் சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடைபெற்றன.

காரைக்காலில் கோயில்பத்து ராஜகணபதி, ஆற்றங்கரை சித்தி விநாயகா், பாரதியாா் சாலையில் வீரசக்தி விநாயகா், திருமலைராயன்பட்டினம் செங்குந்த விநாயகா், நேருநகரில் உள்ள ஆனந்த விநாயகா், வரிச்சிக்குடி வரசித்தி விநாயகா், தலத்தெரு பகுதி சிவலோகநாதசுவாமி கோயிலில் செல்வகணபதி உள்ளிட்ட பிற இடங்களில் உள்ள விநாயகா் கோயில்களில் காலை முதல் வழிபாடுகள் நடைபெற்றன.
பக்தா்கள் கொழுக்கட்டை, மோதகம் உள்ளிட்டவற்றை தயாா் செய்துவந்து கோயில்களில் விநாயகருக்கு நைவேத்தியம் செய்தனா். சில கோயில்களில் கணபதி ஹோமம் நடத்தப்பட்டது.