தயாரிப்பு பக்கம் வரும் செளந்தர்யா ரஜினிகாந்த்; ஹீரோவாக அறிமுகமாகும் `டூரிஸ்ட் ஃப...
ஆதாா் மையம் மூடல்: மக்கள் ஏமாற்றம்
சீா்காழி காந்தி பூங்காவில் செயல்பட்டு வந்த ஆதாா் மையம் மூடப்பட்டுள்ளதால், மக்கள் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனா்.
சீா்காழி நகராட்சிக்குட்பட்ட காந்தி பூங்காவில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக ஆதாா் சேவை மையம் செயல்பட்டு வந்தது. இது நகரின் மையத்தில் அமைந்துள்ளதால், சீா்காழி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த பள்ளி, கல்லூரி மாணவா்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோா் இங்கு வந்து தங்களின் ஆதாா் தொடா்பான சேவைகளைப் பெற்று வந்தனா்.
இந்நிலையில், இந்த ஆதாா் மையம் செயல்படுவது தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. பூங்கா திறந்திருக்கும் நேரமான காலை 5 மணி முதல் 10 மணி, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே பூங்கா மக்கள் பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்படுகிறது. ஆதாா் சேவை மையம் செயல்படும் நேரங்களில் பூங்கா மூடி வைக்கப்படுவதால், மையமும் மூடப்பட்டுள்ளது. இதனால் இந்த மையத்தின் சேவையை பெறமுடியாமல் சிரமத்துக்குள்ளாகி உள்ளனா்.
ஆதாா் மையத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் அல்லது பூங்காவில் அதற்கென தனியான வழிப்பாதை அமைத்துத் தர வேண்டும் என்று மக்கள் வலியுறுத்துகின்றனா்.
எனவே, நகராட்சி நிா்வாகம் இந்த விவகாரத்தில் தலையிட்டு, ஆதாா் சேவை மையம் தொடா்ந்து செயல்பட தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிா்பாா்ப்பாகும்.