திருமணமாகி 15 ஆண்டுகள்! மனைவிக்கு சிவகார்த்திகேயன் வாழ்த்து!
``விவாகரத்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கவே வந்தோம்'' - மனைவியுடன் வந்த நடிகர் கோவிந்தா
கோவிந்தா - சுனிதா பத்திரிகையாளர் சந்திப்பு
பாலிவுட் நடிகர் கோவிந்தா, தனது மனைவி சுனிதா அஹுஜாவை விவாகரத்து செய்யப்போவதாக சமீபத்தில் தகவல்கள் பரவியது.
சுனிதா அஹுஜா விவாகரத்து கேட்டு மும்பை குடும்பநல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருப்பதாகவும், விசாரணைக்கு சுனிதா சரியாக ஆஜராவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது. சுனிதாவும், கோவிந்தாவும் தனித்தனியாக வசிப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
கோவிந்தா தனியாக வசிப்பதை ஏற்கெனவே சுனிதாவே ஒரு முறை தனது பேட்டியில் குறிப்பிட்டு இருந்தார். அடிக்கடி வெளியில் சென்றுவிட்டு கோவிந்தா வீட்டுக்கு தாமதமாக வருவதால் அவர் தங்களது வீட்டிற்கு எதிரில் உள்ள வீட்டில் வசிப்பதாக குறிப்பிட்டு இருந்தார்.

ஆனால் விவாகரத்து தொடர்பாக சமீபத்தில் வெளியாகி இருந்த செய்தி மிகவும் பழையது என்றும், அவர்கள் விவாகரத்து கோரி கடந்த ஆண்டு விண்ணப்பித்தது உண்மைதான் என்றும், அதன் பிறகு அவர்களுக்குள் இருந்த பிரச்னை சரியாகிவிட்டதாக இருவரின் வழக்கறிஞர் லலித் குறிப்பிட்டு இருந்தார்.
மேலும் விநாயகர் சதுர்த்தியன்று இருவரும் ஒன்றாக தோன்றுவார்கள் என்றும் குறிப்பிட்டு இருந்தார். வழக்கறிஞர் சொன்னது போன்று இன்று கோவிந்தாவும், அவரது மனைவி சுனிதாவும் பத்திரிகையாளர்கள் முன்பு ஒன்றாக தோன்றி புகைப்படத்திற்கு போஸ் கொடுத்ததோடு பேட்டியும் கொடுத்தனர்.
எந்த சர்ச்சையும் கிடையாது - சுனிதா விளக்கம்
அங்கு வந்திருந்தவர்களுக்கு இனிப்பு வழங்கிய கோவிந்தா தனது குழந்தைகள் இரண்டு பேரையும் ஆசிர்வாதம் செய்து அன்பு செலுத்துங்கள் என்றும், அதன் மூலம் அவர்கள் என்னை விட பெரிதாக பிரகாசிப்பார்கள்'' என்று குறிப்பிட்டார்.
"விவாகரத்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கவே விநாயகர் சதுர்த்தியன்று ஒன்றாக வந்திருக்கிறோம். எங்களுக்குள் எந்த சர்ச்சையும் கிடையாது" என்று கோவிந்தாவின் மனைவி சுனிதா பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

சமூக வலைத்தளத்தில் சுனிதாவின் பகிர்வுகள்
சுனிதா இருவர் தொடர்பாக தனிப்பட்ட வாழ்க்கையை பத்திரிகையாளர்கள் மற்றும் சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்து கொண்டதால் கோவிந்தா தனது மனைவி மீது அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது.
கோவிந்தா குறித்து ஒரு முறை சுனிதா அளித்திருந்த பேட்டியில்,''அடுத்த பிறவியில் அவர் என் கணவராக இருக்கக்கூடாது என்று நான் அவரிடம் சொல்லியிருக்கிறேன். அவர் விடுமுறையில் செல்வதில்லை. நான் என் கணவருடன் வெளியே சென்று தெருக்களில் பானி-பூரி சாப்பிட விரும்பும் நபர்.
அவர் அதிக நேரம் வேலையில் செலவிட்டார். நாங்கள் இருவரும் படம் பார்க்க வெளியே சென்ற ஒரு சம்பவம் கூட எனக்கு நினைவில் இல்லை." என்று குறிப்பிட்டு இருந்தார்.
1987 - ல் காதல் திருமணம்
கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருவரும் சமாதானமாகிவிட்டதாக கூறப்படுகிறது. கோவிந்தாவும், அவரது மனைவியும் காதலித்து 1987-ம் ஆண்டு திருமணம் செய்து அதனை ரகசியமாக வைத்திருந்தனர். ஒரு குழந்தை பிறந்த பிறகுதான் அவர்கள் தங்களது திருமணத்தை வெளியுலகிற்கு அறிவித்தனர்.