செய்திகள் :

``உலக வர்த்தகம் தானாக நடைபெற வேண்டும்; அழுத்தத்தின் கீழல்ல'' - RSS தலைவர் மோகன் பகவத்

post image

ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழா

டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில், ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழா மூன்று நாள் கருத்தரங்கு தொடர் சொற்பொழிவுடன் நடைபெற்று வருகிறது.

அதில், இரண்டாம் நாளான நேற்று “100 ஆண்டுகளின் சங்கப் பயணம்: புதிய எல்லைகள்” என்ற தலைப்பில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் உரையாற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது:
“உள்நாட்டில் தயாரிக்கப்படும் எதையும் வெளியிலிருந்து இறக்குமதி செய்யத் தேவையில்லை. உள்நாட்டில் தயாரிக்கப்படாததுடன், வாழ்க்கைக்கு அத்தியாவசியமானவற்றை மட்டும் நாம் இறக்குமதி செய்யலாம்.

நாட்டின் கொள்கை தானாகவே வகுக்கப்பட வேண்டும்; ஒருவரின் அழுத்தத்தின் கீழ் செல்லக் கூடாது. சுதேசி என்பது, நாட்டில் ஏற்கனவே உள்ள அல்லது எளிதில் உற்பத்தி செய்யக்கூடிய பொருட்களை இறக்குமதி செய்யாமல் இருப்பதைக் குறிக்கிறது.

மோகன் பகவத்
மோகன் பகவத்

ஆத்மநிர்பர் அல்லது சுதேசி முக்கியம். சர்வதேச வர்த்தகம் தானாகவே நடைபெற வேண்டும்; ஆனால் அழுத்தத்தின் கீழ் நிகழக்கூடாது. சுயசார்புதான் அனைத்து பிரச்னைகளுக்கும் முக்கிய தீர்வாகும்.

எனவே, உள்நாட்டு (சுதேசி) தயாரிப்புகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டியது அவசியம்.

இந்திய மதிப்புகளை ஏற்றுக்கொள்வது, சமூக நல்லிணக்கத்தை வலுப்படுத்துவது, சுற்றுச்சூழல் உணர்வை ஊக்குவிப்பது உள்ளிட்டவை — சமூக மாற்றத்திற்கான திட்டங்களாக செயல்படுத்தப்பட வேண்டும்,” என அவர் உரையாற்றினார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

``ட்ரம்பின் 50% வரியை ஈடுசெய்ய, இந்தியா என்னென்ன நடவடிக்கை எடுத்துள்ளது?” - நிதி அமைச்சகம் விளக்கம்

நேற்றுமுதல் இந்தியா மீது அமெரிக்காவின் 50 சதவீத வரி அமலுக்கு வந்துவிட்டது.இந்த நிலையில், நேற்று இந்திய நிதி அமைச்சகம் மாதாந்திர பொருளாதார மதிப்பாய்வை வெளியிட்டது.அதில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்... மேலும் பார்க்க

Doctor Vikatan: 8 வயதுக் குழந்தைக்கு டான்சில்ஸ் பாதிப்பு; ஆபரேஷன் இல்லாமல் குணமாகுமா?

Doctor Vikatan: எனக்கு இரண்டு குழந்தைகள். மூத்த மகனுக்கு டான்சில்ஸ் பாதிப்பு பாடாகப் படுத்தியதால், 9 வயதில் ஆபரேஷன் செய்தோம். இளையவனுக்கும் அதே பிரச்னை. அடிக்கடி சளி, காய்ச்சல் பிரச்னைகளால் அவதிப்படுக... மேலும் பார்க்க

Health: என்ன செய்தும் எடை குறையவில்லையா? காரணங்கள் இவைதான்!

இனிப்பையும் கொழுப்பையும் தவிர்ப்பார்கள். கலோரிகளைக் கணக்குப் பார்த்துச் சாப்பிடுவார்கள். எடை விஷயத்தில் இப்படியெல்லாம் அக்கறை எடுத்துக்கொண்டும் உடல் பருமன் குறையவில்லை என்று புலம்புவார்கள். மேலே சொன்ன... மேலும் பார்க்க

Juice: ஒரே நேரத்தில் முக்கால் லிட்டர் ஜூஸ் குடிக்கலாமா?

எங்கு பார்த்தாலும் 750 ml பழச்சாறுக்கடைகள் கண்களில் தென்படுகின்றன. பொதுவாக பழச்சாறு ஆரோக்கியமானதுதான். ஆனால், இப்படி 600 ml, 700 ml, 750 ml என ஜூஸ் குடிப்பதும், அதை அடிக்கடி குடிப்பதும் எந்தளவுக்கு நல... மேலும் பார்க்க

மாதம் ரூ.1500: `பெண்களுக்கான திட்டத்தில் எப்படி ஆண்கள்?' - மகாராஷ்டிரா அரசு அதிர்ச்சி

முக்கிய மந்திரி லட்கி பெஹின் யோஜனாமகாராஷ்டிராவில் கடந்த ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு பெண்களுக்கு மாதம் ரூ.1500 வழங்கும் திட்டத்தை ஆளும் பா.ஜ.க கூட்டணி அரசு அறிவித்தது. `முக்கிய மந்திரி லட்கி பெஹி... மேலும் பார்க்க

Sarathkumar: ``MGR-போல மக்கள் சக்தியுடையவர் நடிகர் சரத்குமார்" - நயினார் நாகேந்திரன்

கள்ளக்குறிச்சியில் நடிகர் சரத் குமாரின் பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்டங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. அதில் உரையாற்றிய பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், ``நட்புக்கு இலக்கணம் சுப்ரீம் ஸ்டார்... மேலும் பார்க்க