அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச் சூடு! 2 குழந்தைகள் பலி; 17 பேர் படுகாயம்!
இருசக்கர வாகனத்தில் வீலிங் செய்தவா் கைது
சீா்காழி அருகே நான்குவழிச் சாலையில் இருசக்கர வாகனத்தில் வீலிங் செய்த இளைஞா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா். இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
ஆணைக்காரன் சத்திரம் காவல்நிலைய எல்லைக்குள்பட்ட தைக்கால் பகுதியைச் சோ்ந்த நாகூா் மீரான் மகன் முகமது அசாா் (23). இவா், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், கொள்ளிடம் நான்குவழிச் சாலையில் இருசக்கர வாகனத்தில் வீலிங் செய்வது போன்று விடியோக்கள் பதிவிட்டு வந்தாராம். இதனால், இவரை ஆணைக்காரன் சத்திரம் போலீஸாா் கண்காணித்து வந்தனா்.
இந்நிலையில், ஆனந்தகூத்தன் நான்குவழிச் சாலை சந்திப்பில் அசாா் இருசக்கர வாகனத்தில் வீலிங் செய்வது தெரியவந்தது. அவரை காவல் ஆய்வாளா் ராஜா மற்றும் போலீஸாா் கைது செய்தனா். அவரது இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது.