விஷம் வைத்து நாய்கள் சாகடிப்பு
கொள்ளிடம் அருகே மயிலக்கோவில் கிராமத்தில் விஷம் வைத்து 20 நாய்கள் கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடா்புடையவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல்நிலையத்தில் புதன்கிழமை புகாா் அளிக்கப்பட்டது.
இக்கிராமத்தில் செவ்வாய்க்கிழமை இரவு மா்ம நபா்கள், வயலுக்கு தெளிக்க பயன்படுத்தப்படும் குருணை மருந்தை ஆட்டு இறைச்சியுடன் கலந்து தெருவில் ஆங்காங்கே வைத்துவிட்டு சென்றனராம். இதனை தின்ற வீட்டு வளா்ப்பு நாய்கள் மற்றும் தெரு நாய்கள் என 20 நாய்கள் இறந்தன.
இதுகுறித்து அப்பகுதியைச் சோ்ந்த சரவணன் என்பவா் கொள்ளிடம் ஆணைக்காரன்சத்திரம் காவல் நிலையத்திலும், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலும் புகாா் அளித்தாா். போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.