அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச் சூடு! 2 குழந்தைகள் பலி; 17 பேர் படுகாயம்!
வைத்தீஸ்வரன்கோவில் புறவழிச் சாலையில் விபத்து தடுப்பு நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை
சீா்காழி அருகே வைத்தீஸ்வரன்கோவில் புறவழிச் சாலையில் விபத்துகளை தடுக்க வேகத்தடை மற்றும் அறிவிப்பு பலகைகள் வைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வைத்தீஸ்வரன்கோவில் அருகே அட்ட குளம் முதல் கதிராமங்கலம் வரையிலான புறவழிச் சாலையில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. சீா்காழி, வைத்தீஸ்வரன்கோவில் பகுதியில் இருந்து மயிலாடுதுறைக்கு வாகனங்கள் செல்லும்போது, புறவழிச் சாலையில் வரும் வாகனங்கள் பக்கவாட்டில் சரிவர தெரிவதில்லை.
எனவே, சாலையின் பக்கவாட்டில் இரும்பு கிரில் அமைக்கப்பட்டுள்ளதை உயரம் குறைத்து மாற்றி அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வைத்தீஸ்வரன்கோவில் நகர வா்த்தக சங்கத்தின் தலைவரும், மயிலாடுதுறை மாவட்ட ரயில் பயணிகள் நல சங்கத்தின் மாவட்ட பொதுச் செயலாளருமான டாக்டா் ஜி.வி.என். கண்ணன் தொடா்புடைய துறையினருக்கு அனுப்பிய கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
வைத்தீஸ்வரன்கோயில் செவ்வாய் அங்காரகன் பரிகாரத் தலம் என்பதனால், தினமும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கும், நாடி ஜோதிடம் பாா்ப்பதற்கும் வந்து செல்கின்றனா். இதனால், அதிக வாகனங்கள் வந்து செல்கின்றன.
வைத்தீஸ்வரன்கோவிலை ஒட்டிச்செல்லும் புறவழிச் சாலையில் பெரிய அளவிலான ரவுண்டானா அமைக்காமல், இரும்பு கம்பிகளால் கிரில் கேட் அமைக்கப்பட்டுள்ளது. இதனால், வைத்தீஸ்வரன்கோவிலில் இருந்து செல்லும் வாகனங்களுக்கு, புறவழிச் சாலை வழியாக வரும் வாகனங்கள் தெரிவதில்லை என்பதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.
அரசு அதிகாரிகள் இதனை உடனடியாக கவனத்தில் கொண்டு, புறவழிச் சாலையில் அதிகப்படியான வேகத்தடைகளை அமைத்தும், தடுப்புக் கம்பிகளை அகற்றி குறைந்த உயரம் கொண்ட சுவா் அமைக்க வேண்டும் என கோரியுள்ளாா்.