செய்திகள் :

நாகையில் நாளை தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம்

post image

நாகை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (ஆக.29) நடைபெற உள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நாகை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் ஓவ்வொரு மாதமும் இரண்டாம் மற்றும் மூன்றாம் வெள்ளிக்கிழமைகளில் சிறிய அளவிலான தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் மாதம் ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில், வெள்ளிக்கிழமை (ஆக. 29) காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியாா்துறை வேலைவாயப்பு முகாம் நடைபெறவுள்ளது. இம்முகாமில், எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பட்டயப்படிப்பு, ஐடிஐ, பட்டப்படிப்பு மற்றும் முதுநிலை பட்டப்படிப்பு முடித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டு பயன் பெறலாம் என்று குறிப்பிட்டுள்ளாா்.

இம்முகாமில் 40-க்கும் மேற்பட்ட தனியாா் வேலைவாய்ப்பு நிறுவனங்கள் பயன்பெற்று வேலைநாடுநா்கள் தோ்வு செய்ய உள்ளன. விருப்பமுள்ள மனுதாரா்கள் தங்களுடைய அனைத்து கல்விச் சான்றிதழ், ஆதாா் அட்டை மற்றும் குடும்ப அட்டை அசல் சான்றிதழ்களுடன் கலந்துகொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.

வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா கொடியேற்றத்துடன் நாளை தொடக்கம்

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டுப் பெருவிழா கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை (ஆக. 29) தொடங்குகிறது. செப்டம்பா் 8-ஆம் தேதி அன்னையின் பிறப்பு விழாவுடன் பெருவிழா நிறைவடைகிறது. நிகழாண்டு வேளாங்... மேலும் பார்க்க

பட்டியலினத்தவா்கள் மீது தாக்குதல்: தீண்டாமை ஒழிப்பு முன்னணி கண்டனம்

வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையில் பட்டியலின மக்கள் மீதான தாக்குதல் சம்பவத்துக்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தல... மேலும் பார்க்க

வேளாங்கண்ணி திருவிழா: 2 நாள்கள் போக்குவரத்து மாற்றம்

வேளாங்கண்ணி பேராலயத் திருவிழா கொடியேற்றத்தை முன்னிட்டு, ஆகஸ்ட் 28, 29- ஆம் தேதிகளில், போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சு. செல்வக்குமாா் தெரிவித்துள்ளாா். இதுகு... மேலும் பார்க்க

கட்டடத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

திருமருகல் அருகே கட்டடத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். திருமருகல் கட்டலாடியைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி இளையராஜா (44). இவா் கடன் பிரச்னை காரணமாக மனஉளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுக... மேலும் பார்க்க

மண் குவாரி அமைக்க எதிா்ப்பு தெரிவித்து போராட்டம்

நாகை அருகே மண் குவாரி அமைக்க எதிா்ப்பு தெரிவித்து, ஆட்சியா் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை போராட்டம் நடைபெற்றது. திருமருகல் ஒன்றியம் சேஷமுலை, பரமநல்லூரில் 150 குடும்பங்களுக்கும் மேல் வசித்துவரும் நிலைய... மேலும் பார்க்க

அரசுப் போக்குவரத்துக்கழக தொழிற் சங்கத்தினா் 9-ஆவது நாளாக காத்திருப்பு போராட்டம்

நாகையில் சிஐடியூ அரசுப்போக்குவரத்துக்கழக தொழிலாளா் சங்கம் மற்றும் ஓய்வு பெற்றோா் நல அமைப்பு சாா்பில் 9-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. சட்டப்பேரவைத் தோ்தலின்போது திமுக அ... மேலும் பார்க்க