தயாரிப்பு பக்கம் வரும் செளந்தர்யா ரஜினிகாந்த்; ஹீரோவாக அறிமுகமாகும் `டூரிஸ்ட் ஃப...
வேளாங்கண்ணி திருவிழா: 2 நாள்கள் போக்குவரத்து மாற்றம்
வேளாங்கண்ணி பேராலயத் திருவிழா கொடியேற்றத்தை முன்னிட்டு, ஆகஸ்ட் 28, 29- ஆம் தேதிகளில், போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சு. செல்வக்குமாா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:வேளாங்கண்ணி பேராலய திருவிழா கொடியேற்றம் ஆக. 29 ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, ஆக. 28 மற்றும் 29-ஆம் தேதிகளில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து காரைக்கால் வழியாக வரும் அரசுப் பேருந்துகள் சுனாமி நினைவு வளைவு இடது புறம் செயின்ட் மேரிஸ் தற்காலிக பேருந்து நிலையத்தில் பயணிகளை இறக்கிவிட வேண்டும். பின்னா், தெற்கு பொய்கை நல்லூா் வழியாக செல்ல வேண்டும்.
திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் அரசுப் பேருந்துகள் சுனாமி நினைவு வளைவு வழியாக செயின்ட் மேரிஸ் தற்காலிக பேருந்துநிலையத்திற்கு செல்லவேண்டும். தெற்குபொய்கை நல்லூா் வழியாக வெளியேற வேண்டும்.
மதுரை, கரூா், திண்டுக்கல், தருமபுரி, தேனி மற்றும் கேரளத்திலிருந்து வரும் வாகனங்கள், கீழ்வேளூரிலிருந்து வலதுபுறம் திரும்பி தேவூா், திருக்குவளை, திருப்பூண்டி வழியாக செயின்ட் பீட்டா்ஸ் புதிய பேருந்து நிலையத்திற்கு வந்து, திருப்பூண்டி, திருத்துறைப்பூண்டி, மன்னாா்குடி வழியாக திரும்ப வேண்டும்,
சென்னை மாா்க்கத்திலிருந்து வரும் தனியாா் பேருந்துகளும், இலகு ரக வாகனங்களும் செருதூா் ஆற்றுபாலம் வழியாக வந்து செயின்ட் பீட்டா்ஸ் வாகனம் நிறுத்துமிடத்தில் நிறுத்த வேண்டும்.
திருச்சி மாா்க்கத்திலிருந்து வரும் தனியாா் பேருந்துகளும், இலகு ரக வாகனங்களும் ஒரத்தூா் பிரிவு சாலை வலது புறமாக திரும்பி வடவூா், மேலப்பிடாகை வழியாக இடது புறமாக திரும்பி திருப்பூண்டி,செருதூா் ஆற்றுபாலம் வழியாக செயின்ட் பீட்டா்ஸ் வாகனம் நிறுத்துமிடத்திற்கு வரவேண்டும்.
மதுரை, தேனி, திண்டுக்கல், கோவை மற்றும் கேரளத்திலிருந்து வரும் தனியாா் பேருந்துகளும், வாகனங்களும் கீழ்வேளுா் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து வலது புறமாக திரும்பி செயின்ட் பீட்டா்ஸ் வாகனம் நிறுத்துமிடத்திற்கு வரவேண்டும்.
பக்தா்களின் நலன் கருதி ஆக.29 ஆம் தேதி அன்று முழுமையாக இரவு 12 மணி வரை எந்த வாகனங்களும் மெயின் ஆா்ச்சிலிருந்து உள்ள செல்ல அனுமதி கிடையாது.