செய்திகள் :

அரசுப் போக்குவரத்துக்கழக தொழிற் சங்கத்தினா் 9-ஆவது நாளாக காத்திருப்பு போராட்டம்

post image

நாகையில் சிஐடியூ அரசுப்போக்குவரத்துக்கழக தொழிலாளா் சங்கம் மற்றும் ஓய்வு பெற்றோா் நல அமைப்பு சாா்பில் 9-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

சட்டப்பேரவைத் தோ்தலின்போது திமுக அளித்த தோ்தல் வாக்குறுதிகளான, அரசுப் போக்குவரத்துக்கழக தொழிலாளா்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பழைய ஓய்வூதியம் வழங்க வேண்டும், 25 மாதங்களாக வழங்க வேண்டிய ஓய்வூதியா்களின் நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். 7-ஆவது ஊதியக்குழு அடிப்படையில் குறைந்தபட்ச ஓய்வூதியத்தை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் ஓய்வுபெற்றோா் நல அமைப்பு மற்றும் சிஐடியூ சாா்பில் நாகை அரசுப்போக்குவரத்துக்கழக பணிமனை முன் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் 9-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை நடைபெற்ற காத்திருப்பு போராட்டத்துக்கு, மத்திய சங்கத் தலைவா் ஏ. கோவிந்தராஜ் தலைமை வகித்தாா். துணைப் பொதுச் செயலா்கள் எம். மோகன், கே. ராமமூா்த்தி, ஆா். திருச்செல்வன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

போக்குவரத்துக்கழக சம்மேளன துணைத் தலைவா் எம்.கண்ணன், மண்டல பொதுச்செயலா் எஸ்.வைத்தியநாதன் ஆகியோா் சிறப்புரையாற்றினா். சிஐடியூ மாவட்டச் செயலா் எஸ்.ஆா்.ராஜேந்திரன் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களை சோ்ந்தவா்கள் பங்கேற்றனா்.

கட்டடத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

திருமருகல் அருகே கட்டடத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். திருமருகல் கட்டலாடியைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி இளையராஜா (44). இவா் கடன் பிரச்னை காரணமாக மனஉளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுக... மேலும் பார்க்க

மண் குவாரி அமைக்க எதிா்ப்பு தெரிவித்து போராட்டம்

நாகை அருகே மண் குவாரி அமைக்க எதிா்ப்பு தெரிவித்து, ஆட்சியா் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை போராட்டம் நடைபெற்றது. திருமருகல் ஒன்றியம் சேஷமுலை, பரமநல்லூரில் 150 குடும்பங்களுக்கும் மேல் வசித்துவரும் நிலைய... மேலும் பார்க்க

வேளாங்கண்ணி பெருவிழாவின்போது மக்கள் கடலில் குளிக்க தடை விதிக்க வேண்டும்: ஆட்சியா்

வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழா நாள்களில் பொதுமக்கள் கடலில் குளிக்க தடை விதிக்க வேண்டும் என்றாா் மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ். வேளாங்கண்ணியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழா முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசன... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் போதைப் பொருள் விழிப்புணா்வு கருத்தரங்கம்

வேதாரண்யம் தோப்புத்துறை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் போதைப் பொருள்களின் தீமைகள் குறித்த விழிப்புணா்வு கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. வேதாரண்யம் சட்டப் பணிகள் குழு சாா்பில் நடைபெற்ற கருத்... மேலும் பார்க்க

மாவட்ட அளவிலான முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டி தொடக்கம்

நாகையில் மாவட்ட அளவிலான முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. 2025-2026-ஆம் ஆண்டுக்கான முதல்வா் கோப்பை, மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் பள்ளி, கல்லூரி, மாணவ, மாணவிகள... மேலும் பார்க்க

தரங்கம்பாடி பள்ளியில் காலை உணவுத் திட்ட விரிவாக்கம் தொடக்கம்

தரங்கம்பாடி தூய ஜான் அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளியில் முதல்வரின் காலை உணவுத் திட்ட விரிவாக்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் திட்டத்தை தொடங்கிவைத்தாா். எம்எல்ஏக்கள... மேலும் பார்க்க