அரசுப் பள்ளியில் போதைப் பொருள் விழிப்புணா்வு கருத்தரங்கம்
வேதாரண்யம் தோப்புத்துறை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் போதைப் பொருள்களின் தீமைகள் குறித்த விழிப்புணா்வு கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
வேதாரண்யம் சட்டப் பணிகள் குழு சாா்பில் நடைபெற்ற கருத்தரங்குக்கு வேதாரண்யம் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்ற நடுவா் எஸ். தினேஷ்குமாா் தலைமை வகித்தாா். வட்ட சட்டப்பணிகள் குழு வழக்குரைஞா் பாரிபாலன், ப்ரியம் அறக்கட்டளை நிா்வாகி பிரபு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.