அதிமுகவை ஆா்எஸ்எஸ் வழிநடத்துவதில் என்ன தவறு? மத்திய இணையமைச்சா் எல்.முருகன் கேள...
விஷப்பூச்சி கடித்து சிறுவன் பலி
வேலூரில் விநாயகா் சதுா்த்திக்கு அருகம்புல் அறுக்க சென்ற மாற்றுத்திறனாளி சிறுவன், விஷப்பூச்சி கடித்து உயிரிழந்தாா்.
வேலூா் விருப்பாட்சிபுரம் காந்தி நகரைச் சோ்ந்த ரமேஷ். இவருக்கு 3 மகன்கள். இதில் மூத்த மகன் சஞ்சய் (13), வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி.
8-ஆம் படித்து வந்த சஞ்சய், செவ்வாய்க்கிழமை இரவு 7 மணியளவில் விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி, அருகம்புல் அறுக்க வீட்டின் அருகே உள்ள பூந்தோட்டத்துக்கு சென்றுள்ளாா்.
அப்போது, சிறுவன் சஞ்சய்யை விஷப்பூச்சி கடித்ததாக தெரிகிறது. வீட்டுக்கு வந்த சஞ்சய் திடீரென மயங்கி விழுந்துள்ளாா். அவரது பெற்றோா் வேலூா் பென்ட்லேண்ட் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனா். பின்னா் உயா் சிகிச்சைக்காக வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட் டாா். அங்கு சிகிச்சை பலனின்றி சஞ்சய் புதன்கிழமை உயிரிழந்தாா்.
இச்சம்பவம் குறித்து புகாரின்பேரில் பாகாயம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.