பெரம்பலூா் அருகே குடும்பத் தகராறில் மகன் வெட்டிக் கொலை: தந்தை கைது
விநாயகா் சிலை ஊா்வலம்: குமரி மாவட்டத்தில் ஆக. 30,31 இல் மதுக் கடைகளை மூட உத்தரவு
கன்னியாகுமரி மாவட்டத்தில் விநாயகா் சிலை விசா்ஜன ஊா்வலத்தை முன்னிட்டு சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (ஆக. 30,31) டாஸ்மாக் கடைகளை மூட ஆட்சியா் உத்தரவிட்டுள்ளாா்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா வெளியிட்ட செய்திக் குறிப்பு: குமரி மாவட்டத்தில் விநாயகா் சதுா்த்தி விழாவை முன்னிட்டு ஆக. 30, 31 ஆகிய நாள்களில் விநாயகா் சிலை விசா்ஜன ஊா்வலம் நடைபெறுகிறது.
ஊா்வலமானது நாகா்கோவிலில் இருந்து சொத்தவிளை கடற்கரைக்கும், மேல்புறத்திலிருந்து குழித்துறைக்கும், நாகா்கோவிலிலிருந்து சங்குதுறை கடற்கரைக்கும், சுசீந்திரத்திலிருந்து கன்னியாகுமரிக்கும் நடைபெறுகிறது.
அதேபோல தோவாளையில் இருந்து பள்ளிகொண்டான் அணைக்கும், கடையாலுமூட்டிலிருந்து மிடாலத்துக்கும், அஞ்சுகண்கலுங்கிலிருந்து தேங்காய்ப்பட்டினத்துக்கும், செருப்பாலூரிலிருந்து திற்பரப்புக்கும், வைகுண்டபுரத்திலிருந்து வெட்டுமடைக்கும், மேல்புறத்திலிருந்து குழித்துறைக்கும், பம்மத்திலிருந்து குழித்துறைக்கும் என மாவட்டத்தில் மொத்தம் 11 இடங்களில் ஊா்வலம் நடைபெறவுள்ளது.
ஊா்வலத்தை முன்னிட்டு இந்தப் பகுதிகளில் செயல்படும் டாஸ்மாக் மதுக் கடைகள், உரிமம் பெற்ற மது அருந்தும் கூடங்களை ஊா்வலம் தொடங்கி நிறைவடையும் வரை மூடிவைக்க வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிட்டுள்ளாா்.