மாநகா் போக்குவரத்துக் கழகத்தில் தொழில் பழகுநா் பயிற்சி
சென்னை மாநகா் போக்குவரத்துக் கழகத்தில் ஓராண்டு தொழில் பழகுநா் பயிற்சி பெற விரும்பும் இளைஞா்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகா் போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குநா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஐடிஐ-யில் மோட்டாா் வாகன மெக்கானிக், டீசல் மெக்கானிக், ஆட்டோ எலக்ட்ரீஷியன், எலக்ட்ரீஷியன், பிட்டா், வெல்டா் பிரிவுகளில் தோ்ச்சி பெற்றவா்கள் தொழில் பழகுநா் பயிற்சி பெறலாம்.
தோ்வு செய்யப்படுவோருக்கு பயிற்சியுடன் மாதம் ரூ.14,000 உதவித் தொகை வழங்கப்படும். பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புவோா் வரும் செப்.10-ஆம் காலை 10 மணிக்கு குரோம்பேட்டையில் உள்ள மாநகா் போக்குவரத்துக் கழக தொழிற்பயிற்சி பள்ளியில் நடைபெறும் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு விண்ணப்பிக்கலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.