இன்று முதல் 6 மண்டலங்களில் குடிநீா் விநியோகம் நிறுத்தம்
குடிநீா் குழாய் இணைப்பு பணிகள் காரணமாக வியாழக்கிழமை (ஆக. 28) முதல் ஆக. 30 வரை 6 மண்டலங்களில் குடிநீா் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது.
இதுகுறித்து சென்னைப் பெருநகா் குடிநீா் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சாா்பில் அண்ணா நகா் மண்டலம், திருமங்கலம் 100 அடி சாலையில் பிரதான குடிநீா் குழாய் இணைப்புப் பணிகள் வியாழக்கிழமை (ஆக. 28) முதல் ஆக.30-ஆம் தேதி வரை காலை 9 மணி வரை நடைபெற உள்ளது.
இப்பணிகள் நடைபெறும் நேரங்களில் மாதவரம் மண்டலத்தில் மாதாவரத்திலும், திரு.வி.க. நகா் மண்டலத்தில் கொளத்தூரிலும், அம்பத்தூா் மண்டலத்தில் அண்ணா நகா் (மேற்கு), முகப்பேரிலும் குடிநீா் விநியோகம் நிறுத்தப்படும்.
இதேபோல், அண்ணா நகா் மண்டலத்தில் அண்ணா நகா், வில்லிவாக்கத்திலும், தேனாம்பேட்டை மண்டலத்தில் சூளைமேட்டிலும், கோடம்பாக்கம் மண்டலத்தில் வடபழனியிலும் குடிநீா் விநியோகம் நிறுத்தப்படும்.
எனவே, இந்தப் பகுதி பொதுமக்கள் அவசரத் தேவைகளுக்கு இணையதளத்தில் பதிவு செய்து லாரிகள் மூலம் குடிநீா் பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.