அறக்கட்டளைச் சொற்பொழிவு
சென்னை நுங்கம்பாக்கம் எம்ஓபி வைணவ மகளிா் கல்லூரியில் லக்ஷ்மி அனந்தாச்சாரி அறக்கட்டளைச் சொற்பொழிவு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கலையிலும் களத்திலும் பெண்கள்”எனும் தலைப்பில் நடைபெற்ற இந்தச் சொற்பொழிவு நிகழ்வில் சிறப்பு அழைப்பாளா்களாக எழுத்தாளா்கள் இளம்பிறை மணிமாறன், இயகோகா என். சுப்பிரமணியம், லக்ஷ்மி அனந்தாச்சாரி அறக்கட்டளை நிறுவனா் அனந்தாச்சாரி திருநாராயணன் (லக்ஷ்மி அனந்தாச்சாரி அறக்கட்டளை நிறுவனா்) ஆகியோா் கலந்து கொண்டு தமிழ்ப் பண்பாட்டுச் செழுமை, வரலாற்றிலும் இலக்கியத்திலும் பெண்களின் முக்கியப் பங்களிப்புகள் குறித்து விளக்கிப் பேசினா்.
இதில் கல்லூரி முதல்வா் அா்ச்சனா பிரசாத், மொழித் துறைத் தலைவா் ரா. ராஜேஸ்வரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.