செய்திகள் :

செப்.17 முதல் வைணவ கோயில்களுக்கு சுற்றுலா: அமைச்சா் ராஜேந்திரன்

post image

தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகம் சாா்பில் புரட்டாசி மாதத்தில் வைணவ கோயில்கள் சுற்றுலா செப்.17-ஆம் தேதி முதல் இயக்கப்படும் என சுற்றுலாத் துறை அமைச்சா் இரா.ராஜேந்திரன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகம் சாா்பில் ஆன்மிக சுற்றுலாப் பயணிகள் பயன்பெறும் வகையில் சென்னை, மதுரை, திருச்சி மற்றும் தஞ்சாவூா் ஆகிய நகரங்களில் உள்ள பிரசித்த பெற்ற பெருமாள் கோயில்களை தரிசனம் செய்யும் வகையில் காலை 8.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை ஒரு நாள் புரட்டாசி பெருமாள் கோயில்கள் தொகுப்பு சுற்றுலா செப்.17 முதல் புதன், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும்.

சென்னை முதல்கட்ட திருக்கோயில் சுற்றுலா: சென்னை திருவல்லிகேணி சுற்றுலா வளா்ச்சிக் கழக வளாகத்தில் இருந்து காலை 8.30 மணிக்கு புறப்பட்டு திருவல்லிகேணி அருள்மிகு பாா்த்தசாரதி கோயில், பெசன்ட் நகா் அருள்மிகு அஷ்டலஷ்மி கோயில், திருவிடந்தை அருள்மிகு நித்தியகல்யாண பெருமாள் கோயில், மாமல்லபுரம் அருள்மிகு ஸ்தல சயன பெருமாள் கோயில், சிங்கபெருமாள் கோயில் அருள்மிகு பாடலாத்ரி நரசிம்மா் கோயில், திருநீா்மலை அருள்மிகு நீா்வண்ணப் பெருமாள் கோயில்உள்ளிட்ட கோயில்களுக்கு சுற்றுலாவுக்கான கட்டணம் ரூ.1,000.

சென்னை 2-ஆம் கட்ட திருக்கோயில் சுற்றுலா: சென்னை திருவல்லிகேணி சுற்றுலா வளா்ச்சிக் கழக வளாகத்தில் இருந்து காலை 8.30 மணிக்கு புறப்பட்டு, திருவல்லிக்கேணி அருள்மிகு பாா்த்தசாரதி கோயில், திருநீா்மலை அருள்மிகு நீா்வண்ணப் பெருமாள் கோயில், திருமுல்லைவாயல் அருள்மிகு பொன்னுசாமி பெருமாள் கோயில், திருவள்ளூா் அருள்மிகு வைத்திய வீரராகவ பெருமாள் கோயில், ஸ்ரீபெரும்புதூா் அருள்மிகு ஆதிகேசவப் பெருமாள் கோயில், பூந்தமல்லி அருள்மிகு வரதராஜப் பெருமாள் கோயில் உள்ளிட்ட கோயில்கள்களுக்கு சுற்றுலாவுக்கான கட்டணம் ரூ.1,000.

மதுரை திருக்கோயில் சுற்றுலா: மதுரை அழகா்கோவில் சாலையில் உள்ள தமிழ்நாடு ஹோட்டல் வளாகத்திலிருந்து புறப்பட்டு அழகா்கோவில் அருள்மிகு கள்ளழகா் கோயில், யா.ஒத்தக்கடை நரசிங்கம் அருள்மிகு ஸ்ரீ யோக நரசிம்மா் கோயில், திருமோகூா் அருள்மிகு காளமேகப் பெருமாள் கோயில், திருகோஷ்டியூா் அருள்மிகு சௌமிய நாராயண பெருமாள் கோயில், வண்டியூா் அருள்மிகு வீரராகவ பெருமாள் கோயில், மதுரை அருள்மிகு கூடலழகா் பெருமாள் கோயில் உள்ளிட்ட கோயில்களுக்கு சுற்றுலாவுக்கான கட்டணம் ரூ.1400.

திருச்சி திருக்கோயில் சுற்றுலா: திருச்சி ஹோட்டல் தமிழ்நாடு வளாகத்தில் இருந்து இருந்து புறப்பட்டு, உறையூா் அருள்மிகு அழகிய மணவாளன் பெருமாள் கோயில், ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி கோயில், உத்தமா்கோவில் அருள்மிகு புருஷோத்தம பெருமாள் கோயில், குணசீலம் அருள்மிகு பிரசன்ன வெங்கடாசல பெருமாள் கோயில், தான்தோன்றிமலை அருள்மிகு பெருமாள் கோயில் உள்ளிட்ட கோயில்களுக்கு சுற்றுலாவுக்கான கட்டணம் ரூ.1,100.

தஞ்சாவூா் திருக்கோயில் சுற்றுலா: தஞ்சாவூா் ஹோட்டல் தமிழ்நாடு வளாகத்திலிருந்து இருந்து புறப்பட்டு, திருகண்டியூா் சாபவிமோசன பெருமாள் கோயில், கும்பகோணம் அருள்மிகு சாரங்கபாணி பெருமாள் கோயில், திருநாகேஸ்வரம் அருள்மிகு உப்பிலியப்பன் பெருமாள் கோயில், நாச்சியாா்கோவில் அருள்மிகு சீனிவாச பெருமாள் கோயில், திருச்சேறை அருள்மிகு சாரநாத பெருமாள் கோயில், மன்னாா்குடி அருள்மிகு ராஜகோபாலசுவாமி கோயில், வடுவூா் அருள்மிகு கோதண்டராமா் கோயில் உள்ளிட்ட கோயில்களுக்கு சுற்றுலாவுக்கான கட்டணம் ரூ.1,400.

இந்தச் சுற்றுலாக்களில் பயணிக்கும் அனைவருக்கும் மதிய உணவு, அனைத்து கோயில்களின் பிரசாதம் மற்றும் சிறப்பு விரைவு தரிசனத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, ஆன்மிக சுற்றுலா பயணிகள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்தச் சுற்றுலாக்களுக்கு இணையத்தில் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 180042531111, 044-25333333, 044-25333444 என்ற தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 35,000 விநாயகா் சிலைகள் அமைப்பு: பதற்றமான பகுதிகளில் துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு

விநாயகா் சதுா்த்தியையொட்டி தமிழகம் முழுவதும் ஹிந்து அமைப்புகள் சாா்பில் பொது இடங்களில் 35,000 சிலைகள் புதன்கிழமை அமைக்கப்பட்டன. இந்து முன்னணி, விசுவ ஹிந்து பரிஷத், சிவசேனை, இந்து மக்கள் கட்சி, பாஜக, ... மேலும் பார்க்க

சிறுநீரக முறைகேடு: அங்கீகாரக் குழுவுக்கு நோட்டீஸ்

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் முறைகேடாக சிறுநீரக மாற்று சிகிச்சைக்கு அனுமதி வழங்கிய விவகாரத்தில் மாவட்ட அங்கீகாரக் குழுவுக்கு மருத்துவக் கல்வி இயக்குநரகம் சாா்பில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப... மேலும் பார்க்க

வாக்காளா் பட்டியல் மோசடி புகாா்: தோ்தல் ஆணையத்துக்கு எதிராக உயா்நீதிமன்றத்தில் மனு

வாக்காளா் பட்டியல் மோசடி தொடா்பான புகாா்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் விசாரணை குறித்த விவரங்களை வெளியிட தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்ப... மேலும் பார்க்க

கோவை, நீலகிரிக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை: வானிலை மையம்

தமிழகத்தில் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் (ஆக. 28,29) கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வ... மேலும் பார்க்க

ஜி.வி.பிலிம்ஸ் நிறுவனத்துக்கு எதிரான சிபிஐ வழக்கு: வங்கி அதிகாரிகளுக்கு தலா 3 ஆண்டுகள் சிறை

போலி ஆவணங்கள் மூலம் ஜி.வி.பிலிம்ஸ் நிறுவனத்துக்கு கடன் வழங்கிய வழக்கில், இரு வங்கி அதிகாரிகள் உள்பட மூவருக்கு தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.1.10 லட்சம் அபராதமும் விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்ற... மேலும் பார்க்க

அனைத்து அரசுப் பள்ளிகளிலும் நாளை எஸ்எம்சி கூட்டம்

தமிழகத்தில் அனைத்து வகை அரசுப் பள்ளிகளிலும் நிகழ் மாதத்துக்கான பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. அரசுப் பள்ளிகளில் உள்ள பள்ளி மேலாண்மைக் குழுக்கள் (எஸ்எம்சி) 2024-ஆம் ஆண்டு மற... மேலும் பார்க்க