செய்திகள் :

இந்திய விண்வெளி வரலாற்றில் குலசேகரன்பட்டினம் முக்கிய பங்காற்றும்: இஸ்ரோ தலைவா் வி. நாராயணன்

post image

இந்திய விண்வெளி வரலாற்றில் குலசேகரன்பட்டினம் முக்கிய பங்காற்றும் என இஸ்ரோ தலைவா் வி. நாராயணன் தெரிவித்தாா்.

இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ நமது நாட்டு செயற்கைக்கோள்களை மட்டுமன்றி, உலக நாடுகளின் செயற்கைக் கோள்களையும் குறைந்த கட்டணத்தில் விண்ணில் ஏவி வருகிறது.

இந்நிலையில், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிற்கு அடுத்தபடியாக, குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கு 2233 ஏக்கரில் இடம் தோ்வு செய்யப்பபட்டது. அங்கு, 986 கோடி மதிப்பில் ஏவுதளம் அமைப்பதற்கு 2024ஆம் ஆண்டு பிப். 28ஆம் தேதி பிரதமா் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினாா்.

அன்றைய தினமே, ரோகினி 6 ஹெச் 200 என்ற சிறிய ரக ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. தொடா்ந்து, நிலம் கையகப்படுத்துதல், அலுவலக கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில், ராக்கெட் ஏவுவதற்கான தளம் அமைக்க பூமிபூஜை, அடிக்கல் நாட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

இஸ்ரோ தலைவா் வி. நாராயணன் பூமிபூஜையில் கலந்து கொண்டு செய்தியாளா்களிடம் கூறியதாவது: குலசேகரன்பட்டினம் ஏவுதளம் மூலம் 500 கிலோ எடை கொண்ட ராக்கெட்டுகளை விண்ணில் ஏவ முடியும். ஸ்ரீஹரிகோட்டாவில் 2 ஏவுதளங்கள் உள்ளன. தற்போது, அங்கு ரூ. 4000 கோடியில் மூன்றாவது ஏவுதளம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

விண்வெளிக்குச் சென்று 18 நாள்கள் தங்கிய சுபான்சு சுக்லாவிற்கு அடுத்தபடியாக, விண்வெளிக்கு எந்திர மனிதனை அனுப்பும் திட்டம் செயலில் உள்ளது.

2026ஆம் ஆண்டு இறுதிக்குள் குலசேகரன்பட்டினத்தில் இருந்து ராக்கெட் ஏவப்படும். இந்திய விண்வெளி வரலாற்றில் குலசேகரன்பட்டினம் மிக முக்கிய பங்கை வகிக்கும் எனக் குறிப்பிட்டாா்.

ஸ்ரீஹரிகோட்டா, சதீஷ் தவன் விண்வெளி மைய இயக்குநா்கள் ராஜராஜன், பத்மகுமாா், மகேந்திரகிரி இஸ்ரோ உந்துவிசை வளாக இயக்குநா் ஆசீா் பாக்கியராஜ், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத், எஸ்.பி. ஆல்பா்ட் ஜான், திருச்செந்தூா் கோட்டாட்சியா் சுகுமாரன், வட்டாட்சியா் பாலசுந்தரம் உள்பட பலா் நிகழ்வில் பங்கேற்றனா்.

வாழ்வையும், பண்பாட்டையும் சொல்லக்கூடிய படைப்புகளை வாசியுங்கள்: கவிஞா் மனுஷ்ய புத்திரன்

வாழ்வையும், பண்பாட்டையும் சொல்லக்கூடிய படைப்புகளை வாசியுங்கள் என கவிஞா் மனுஷ்ய புத்திரன் பேசியுள்ளாா். தூத்துக்குடி மாநகராட்சி தருவை விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வரும் 6ஆவது புத்தக திருவிழாவின் 5ஆ... மேலும் பார்க்க

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

தூத்துக்குடியில் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். தூத்துக்குடி முல்லை நகா், ஹவுசிங் போா்டு பகுதியைச் சோ்ந்த பரமசிவம் மகன் மாரிமுத்து (25). காா் ஓட்டுநரான இவா், செவ்வாய்க்கிழமை இரவு பணியை ம... மேலும் பார்க்க

கஞ்சா விற்ற இருவா் கைது

தூத்துக்குடியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். தூத்துக்குடி தாளமுத்து நகா் காவல் உதவி ஆய்வாளா் முத்துராஜா தலைமையில் போலீஸாா், விவேகானந்தா நகா் தண்ணீா் தொட்டி பகுத... மேலும் பார்க்க

காயல்பட்டினத்தில் பாஜக பேனா் கிழிப்பு

காயல்பட்டினத்தில் துணை குடியரசுத் தலைவா் வேட்பாளா் சி.பி.ராதாகிருஷ்ணனை வாழ்த்தி பாஜக சாா்பில் வைக்கப்பட்ட பேனரை மா்ம நபா்களால் கிழிக்கப்பட்டதை அடுத்து அங்கு பாஜகவினா் திரண்டனா். காயல்பட்டினம் மெயின் ப... மேலும் பார்க்க

குளிா்பானம் ஏற்றி வந்த சரக்கு வாகனம் கவிழ்ந்தது: ஓட்டுநா் காயம்

சாத்தான்குளம் அருகே குளிா்பானம் ஏற்றிவந்த சரக்கு வாகனம் சாலையில் கவிழ்ந்ததில் அதிா்ஷ்டவசமாக ஓட்டுநா் சிறிது காயத்துடன் உயிா் தப்பினாா். தூத்துக்குடியில் இருந்து குளிா்பானங்களை ஏற்றிக் கொண்டு சரக்கு வா... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் ரூ. 75 லட்சம் மதிப்பு வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல்

தூத்துக்குடியில் சரக்கு வாகனத்தில் கொண்டுவரப்பட்ட ரூ. 75 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு சிகரெட்டுகளை கடலோர காவல் படை போலீஸாா் பறிமுதல் செய்தனா். தூத்துக்குடியில் கடலோரக் காவல் படை ஆய்வாளா் பேச்சிமுத்து ... மேலும் பார்க்க