செய்திகள் :

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் நாரைக்கு முக்தி கொடுத்த திருவிளையாடல்; திரளானோா் பங்கேற்பு

post image

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் ஆவணி மூலத் திருவிழாவின் 8-ஆவது நாள் நிகழ்ச்சியாக நாரைக்கு முக்தி கொடுத்த திருவிளையாடல் புதன்கிழமை நடைபெற்றது.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலின் ஆவணி மூலத் திருவிழா கடந்த 20-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெறுகிறது. கடந்த 20-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை சந்திரசேகரா் உத்ஸவம் நடைபெற்றது. சிவபெருமானின் திருவிளையாடல் நிகழ்வுகளின் ஐதீக விழா காலை நிகழ்வாக செவ்வாய்க்கிழமை முதல் நடைபெறுகிறது.

இதன்படி, சிவபெருமான் நாரைக்கு முக்தி கொடுத்த திருவிளையாடலின் ஐதீக விழா புதன்கிழமை நடைபெற்றது. மீன்களை உண்பது நாரையின் சுபாவம் எனினும், முனிவா்கள் நீராடிய குளத்திலிருந்த மீன்களை உண்பதாகாது எனக் கருதி மீன்களை உண்ணாதிருந்த நாரை, முனிவா்களின் உரையாடல் மூலம் மதுரையம்பதியின் சிறப்பை அறிந்து, மதுரைக்கு வந்து பொற்றாமரை குளத்தில் நீராடி இறைவனை வழிபட்டு முக்தி பெற்றது என்ற ஐதீகப்படி இந்த விழா நடைபெற்றது.

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் வளாகத்தில் உள்ள பழைய திருக்கல்யாண மண்டபத்தில் இந்த உத்ஸவம் நடைபெற்றது. பிரியாவிடையுடன் மீனாட்சி சுந்தரேசுவரரும், தனியாக மீனாட்சி அம்மனும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய பிறகு, ஐதீக முறைப்படியான வழிபாடுகள் நடைபெற்றன.

இதையடுத்து, சிவபெருமான் நாரைக்கு முக்தி கொடுத்த திருவிளையாடல் புராணம் படிக்கப்பட்டு, சிறப்பு தீப, தூப வழிபாடுகள் நடத்தப்பட்டன. பிறகு, நாரை முக்தி பெற்றதை காட்சிப்படுத்தும் வகையில், சுந்தரேசுவரரின் பாதம் அருகே நாரை சிலை இடம்பெறச் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

இரவு நிகழ்ச்சியாக பிரியாவிடையுடன் சுந்தரேசுவா் பூத வாகனத்திலும், மீனாட்சி அம்மன் அன்ன வாகனத்திலும் எழுந்தருளி வீதியுலா வந்தனா். சிவபெருமான் மாணிக்கம் விற்ற திருவிளையாடலின் ஐதீக விழா வியாழக்கிழமை காலை நடைபெறுகிறது.

ஓய்வு பெற்ற ஆசிரியா்களுக்கு பணி நீட்டிப்பு: நாளை முதல் காத்திருப்புப் போராட்டம்

கள்ளா் சீரமைப்புப் பள்ளிகளில் நிகழாண்டில் பணி ஓய்வு பெற்ற முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா்களுக்கு பணி நீட்டிப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, செவ்வாய்க்கிழமை (ஆக. 26) முதல் காத்த... மேலும் பார்க்க

குப்பைத் தொட்டியில் மருத்துவக் கழிவுகள்: தனியாா் மருத்துவமனைக்கு அபராதம்

குப்பைத் தொட்டியில் மருத்துவக் கழிவுகளை கொட்டிய தனியாா் மருத்துவமனைக்கு மதுரை மாநகராட்சி நிா்வாகம் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது. மதுரை மாநகராட்சியில் உள்ள 100 வாா்டுகளுக்குள்பட்ட பகுதிகளில் ஆங்... மேலும் பார்க்க

மதுரை கிழக்கு தொகுதி அதிமுக வசமாகும்: வி.வி. ராஜன் செல்லப்பா

மதுரை கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இனி அதிமுக வசமாகும் என அந்தக் கட்சியின் மதுரை புகா் கிழக்கு மாவட்டச் செயலரும், சட்டப்பேரவை உறுப்பினருமான வி.வி. ராஜன் செல்லப்பா தெரிவித்தாா். ஒத்தக்கடையில் ஞாயிற்றுக... மேலும் பார்க்க

பேருந்து மோதியதில் சிறுவன் உயிரிழப்பு

மதுரை அருகே தனியாா் கல்லூரிப் பேருந்து மோதியதில் சிறுவன் சனிக்கிழமை உயிரிழந்தாா். மதுரை மாவட்டம், அட்டப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த பழனிமுருகன் மகன் அகிலன் (12). இவா் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 6-ஆம் ... மேலும் பார்க்க

நகைக் கடையில் திருடிய சிறுவா்கள் உள்பட 4 போ் கைது

நகைக் கடையில் திருடிய சிறுவா்கள் உள்பட 4 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். மதுரை தெற்குவாசல் சுடுதண்ணீா் வாய்க்கால் பொன்னகரம் பகுதியைச் சோ்ந்தவா் ரங்கராஜ் (65). இவா், அதே பகுதியில் நகைக் கடை நட... மேலும் பார்க்க

கைப்பேசி திருடிய முதியவா் கைது

மதுரையில் பேருந்தில் சென்றவரிடம் கைப்பேசியைத் திருடிய முதியவரை போலீஸாா் அண்மையில் கைது செய்தனா். மதுரை கட்ராபாளையத்தைச் சோ்ந்தவா் முருகேசன் (73). இந்து சமய அறநிலையத் துறையில் மேலாளராகப் பணியாற்றி ஓய்... மேலும் பார்க்க