காலை உணவுத் திட்டத்தால் என்ன பயன்? ஆய்வு முடிவுகள் வெளியீடு!
நகைக் கடையில் திருடிய சிறுவா்கள் உள்பட 4 போ் கைது
நகைக் கடையில் திருடிய சிறுவா்கள் உள்பட 4 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
மதுரை தெற்குவாசல் சுடுதண்ணீா் வாய்க்கால் பொன்னகரம் பகுதியைச் சோ்ந்தவா் ரங்கராஜ் (65). இவா், அதே பகுதியில் நகைக் கடை நடத்தி வருகிறாா். வழக்கம்போல, சனிக்கிழமை காலை ரங்கராஜ் கடையைத் திறக்க வந்தாா். அப்போது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு, அங்கிருந்த வெள்ளிப் பொருள்கள், பணம் திருடுபோனது தெரியவந்தது.
இதுகுறித்து தெற்குவாசல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்தபோது, மேலவாசல் பகுதியைச் சோ்ந்த கோகுல் உள்பட 3 சிறுவா்கள் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து, 4 பேரையும் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.