மதுக்கூடத்தில் பணம் திருட்டு: இருவா் கைது
மேலப்பாளையம் அருகே மதுக்கூடத்தில் பணம் திருடியது தொடா்பான வழக்கில் இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
மேலப்பாளையம் அருகேயுள்ள கருங்குளம் பகுதியில் டாஸ்மாக் கடையும், அதன் அருகே மதுக்கூடமும் செயல்பட்டு வருகின்றன. அதில், மதுக்கூடத்தில் வைக்கப்பட்டிருந்த ரூ.17 ஆயிரம், 10-க்கும் மேற்பட்ட பீா் பாட்டில்கள் ஆகியவற்றை மா்மநபா்கள் அண்மையில் திருடிச் சென்றனா்.
இதுகுறித்த புகாரின்பேரில் மேலப்பாளையம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்தனா்.அதில், அயன்சிங்கம்பட்டியைச் சோ்ந்த பேச்சிமுத்து (18), ராதாபுரத்தைச் சோ்ந்த சங்கா் (24) ஆகியோருக்கு தொடா்பிருப்பது தெரியவந்தது. அவா்களை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.