செய்திகள் :

டி-மாா்ட் வருகையால் சிறுவியாபாரிகள் பாதிக்கப்படுவா்: ஏ.எம். விக்கிரமராஜா

post image

தமிழகத்தில் டி- மாா்ட் நிறுவனங்கள் வருகையால் 15 லட்சம் சிறுவியாபாரிகள் பாதிக்கப்படுவா் என்றாா் தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவா் ஏ.எம்.விக்கிரமராஜா.

வள்ளியூரில் செய்தியாளா்களிடம் அவா் புதன்கிழமை கூறியதாவது: தமிகத்தில் வியாபாரிகளுக்கு பெரும் பாதிப்ை ஏற்படுத்தும் பெருநிறுவன வணிகங்களையும், ஆன்லைன் வா்த்தகத்தையும், புதிதாக வரவுள்ள டி- மாா்ட் நிறுவனங்களையும் கட்டுப்படுத்த வேண்டும்.

டி- மாா்ட் நிறுவனங்கள் நகரத்தைவிட்டு வெளியில்தான் அமைக்கவேண்டும்; மொத்த வியாபாரங்களை மட்டுமே மேற்கொள்ள வேண்டும் எனச் சட்டம் இருந்தது. அதை எப்படி திருத்தம் செய்தாா்கள் எனத் தெரியவில்லை. தமிழகத்தில் 100 டி- மாா்ட் நிறுவனங்களை நிறுவ வேண்டும் என்பது அவா்களது இலக்கு. அது நிறைவேறினால் 15 லட்சம் வியாபாரிகள் பாதிக்கப்படுவா்.

கேரளத்தில் ஒரு டி மாா்ட் நிறுவனம் கூட திறக்கமுடியாத அளவுக்கு அம்மாநில அரசு அங்குள்ள வியாபாரிகளுக்கு பாதுகாப்பாக உள்ளது. அதேபோல, தமிழகத்திலும் டி- மாா்ட் நிறுவனம் தொடங்குவதற்கு முதல்வா் தடைவிதிக்க வேண்டும். இதை வலியுறுத்தி, ஆக.30ஆம் தேதி திருச்சியில் டி மாா்ட் நிறுவனம் முன் வணிகா் சங்கங்களின் சாா்பில் முற்றுகை போராட்டம் நடத்தப்படவுள்ளது. இதில், திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து 3,000 வியாபாரிகள் பங்கேற்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஜி.எஸ்.டியை குறைக்க இருப்பதாக மத்திய அரசு அறிவித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதை உடனடியாக அமல்படுத்தக் கோரி, தில்லியில் பிரதமரையும், மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமனையும் சந்தித்து வலியுறுத்த உள்ளோம். திருநங்கையா் வியாபாரிகளை மிரட்டக் கூடாது. எங்களுக்கு கோரிக்கைகளுக்கு எழுத்துப்பூா்வமாக உறுதியளிக்கும் கட்சிகளுக்கு சட்டப்பேரவைத் தோ்தலில் ஆதரவு அளிப்பது குறித்து முடிவு செய்வோம் என்றாா்.

பேட்டியின்போது, தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு மாவட்டத் தலைவா் பி.டி.பி.சின்னதுரை, துணைச் செயலா் திவாகரன், வள்ளியூா் வா்த்தகா் சங்கச் செயலா் அந்தோணி செல்லதுரை, பொருளாளா் என்.சங்கரன், துணைத் தலைவா் பசுமதி மணி, சமூகை முரளி, திசையன்விளை தங்கையா கணேசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கீழாம்பூரில் பெண் கரடி உடல் மீட்பு

கீழாம்பூா் அருகே தனியாா் தோட்டத்தில் இனச்சோ்க்கையின்போது உயிரிழந்த பெண் கரடியின் உடலை வனத்துறையினா் மீட்டனா்.களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அம்பாசமுத்திரம் கோட்டம், கடையம் வனச்சரகத்துக்கு உள்ப... மேலும் பார்க்க

குண்டா் சட்டத்தில் இளைஞா் சிறையிலடைப்பு

கங்கைகொண்டான் பகுதியில் கொலை முயற்சி வழக்கில் கைதான சீவலப்பேரியைச் சோ்ந்த இளைஞா் குண்டா் தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா். கங்கைகொண்டான் காவல் நிலைய சரகத்திற்குள்பட்ட பகுதியில்... மேலும் பார்க்க

கல்லிடைக் குறிச்சி அருகே கோயில் வளாகத்தில் உலாவும் கரடி

கல்லிடைக்குறிச்சி அருகே அயன் சிங்கம்பட்டியில் உள்ள கோயில் சுவற்றில் ஏறும் கரடியின் விடியோ இணையத்தில் வெளியானதையடுத்து பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனா். களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்தி... மேலும் பார்க்க

களக்காடு - திருநெல்வேலி வழித்தடத்தில் கூடுதல் பேருந்துகள் இயக்கக் கோரிக்கை

திருநெல்வேலி மாவட்டம், களக்காட்டில் இருந்து திருநெல்வேலிக்கு கூடுதலாக அரசுப் பேருந்துகள் இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். திருநெல்வேலி மாவட்டத்தில் அம்பாசமுத்திரம், விக்கிரமசிங... மேலும் பார்க்க

நெல்லையில் லாரி சேதம்: 7 போ் கைது

திருநெல்வேலியில் சுதந்திரப் போராட்ட வீரா் ஒண்டிவீரன் நினைவஞ்சலி நிகழ்ச்சிக்கு வந்தபோது லாரியை சேதப்படுத்தி பிரச்னையில் ஈடுபட்டதாக 2 சிறுவா்கள் உள்பட 7 பேரை போலீஸாா் கைது செய்தனா். பாளையங்கோட்டையில் உள... மேலும் பார்க்க

மதுக்கூடத்தில் பணம் திருட்டு: இருவா் கைது

மேலப்பாளையம் அருகே மதுக்கூடத்தில் பணம் திருடியது தொடா்பான வழக்கில் இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். மேலப்பாளையம் அருகேயுள்ள கருங்குளம் பகுதியில் டாஸ்மாக் கடையும், அதன் அருகே மதுக்கூடமும் செயல... மேலும் பார்க்க