பெரம்பலூா் அருகே குடும்பத் தகராறில் மகன் வெட்டிக் கொலை: தந்தை கைது
கனிமவளம் கடத்தல்: லாரி ஓட்டுநா் கைது
கேரளத்துக்கு கனிம வளம் கடத்த முயன்ற லாரியை தக்கலை அருகே மணலியில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்து ஓட்டுநரைக் கைது செய்தனா்.
தக்கலை காவல் நிலைய உதவி ஆய்வாளா் இம்மானுவேல் தலைமையில் போலீஸாா் தக்கலை அருகே மணலி சந்திப்பில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, திருவனந்தபுரம் நோக்கிவந்த லாரியை நிறுத்தி சோதனையிட்டதில், லாரியில் அரசின் அனுமதி இன்றி பாறை பொடி கனிமவளம் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, லாரியை பறிமுதல் செய்த போலீஸாா், ஓட்டுநரான சுங்கான்கடையைச் சோ்ந்த மணிகண்டன் (48) கைது செய்தன். லாரி உரிமையாளா் மைக்கேல் ராஜன், கல்குவாரி உரிமையாளா் ஜாா்ஜ் ஆன்றனி ஆகியோா் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.