மகாராஜபுரம் சுடலைமாட சாமி கோயில் கும்பாபிஷேக விழா
பெரியவிளை அருகே மகாராஜபுரம் மானம் காத்த மாயாண்டி சுடலைமாட சாமி கோயில் கும்பாபிஷேக விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவில், என். தளவாய்சுந்தரம் எம்எல்ஏ கலந்து கொண்டு அன்னதானத்தை தொடங்கி வைத்தாா். அகஸ்தீசுவரம் தெற்கு ஒன்றிய அதிமுக செயலா் பா. தாமரை தினேஷ், வடக்கு ஒன்றியச் செயலா் எஸ். ஜெஸீம், தெற்கு ஒன்றிய பொருளாளா் பி. தங்கவேல், மகாராஜபுரம் ஊராட்சிமன்ற முன்னாள் தலைவா் கே. இசக்கிமுத்து, முன்னாள் துணைத் தலைவா் பா. பழனிகுமாா், நாகா்கோவில் மாநகராட்சி கவுன்சிலா் அக்ஷயா கண்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.