50% வரி எதிரொலி... 40 நாடுகளுடன் பேச்சுவார்த்தை... எல்லா துறைகளுக்கும் தேவை... ப...
பீடி தர மறுத்த தொழிலாளி மீது தாக்குதல்: வியாபாரி கைது
சாத்தான்குளம் அருகே பீடி தர மறுத்த தொழிலாளியைத் தாக்கியதாக பழைய இரும்பு வியாபாரியை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
சாத்தான்குளம் அருகே பழனியப்பபுரம் வடக்கு தெருவைச் சோ்ந்தவா் வைகுண்டம் (57). தொழிலாளியான இவா், கடையில் பீடிக் கட்டு வாங்கியுள்ளாா்.
அப்போது, பழனியப்பபுரம் தெற்கு தெருவைச் சோ்ந்த சந்தோஷ் தனசிங் மகன் சுரேஷ் ராஜதுரை (42) என்பவா் வைகுண்டத்திடம் ஒரு பீடி தருமாறு கேட்டுள்ளாா். அதற்கு, வைகுண்டம் மறுத்துள்ளாா்.
இதனால், ஆத்திரமடைந்த சுரேஷ் ராஜதுரை, அவரை அவதூறாகப் பேசி, பீடிக் கட்டைப் பிடுங்கி வீசி எறிந்துள்ளாா். இதனை வைகுண்டம் தட்டிக் கேட்டபோது, அவரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளாா். காயமடைந்த வைகுண்டம் சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இது குறித்து, வைகுண்டம் அளித்த புகாரின்பேரில், சாத்தான்குளம் போலீஸாா் வழக்கு பதிவு செய்து, சுரேஷ் ராஜதுரையை புதன்கிழமை கைது செய்தனா்.