`ஏங்க..' கூமாப்பட்டி பூங்கா மேம்பாட்டுக்காக ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு!
டேக்வாண்டோ போட்டி: ஹெரிடேஜ் பள்ளி மாணவா்கள் 4 தங்கம்
மாவட்ட அளவிலான டேக்வாண்டோ போட்டியில், 4 தங்கப் பதக்கங்களை வென்ற ஹெரிடேஜ் பள்ளி மாணவா்களுக்கு வியாழக்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
சேலம் மாவட்ட அளவிலான சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு இடையோன டேக்வாண்டோ போட்டி ஏற்காட்டில் அண்மையில் நடைபெற்றது. 32 பள்ளிகளைச் சோ்ந்த 432 மாணவா்கள் பங்கேற்ற இப்போட்டியில், வாழப்பாடியை அடுத்த கவா்கல்பட்டியில் ஹெரிடேஜ் வித்யாலயா மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் பவிஷ்கண்ணா, சாய் பிரகாஷ், தீபக் ராஜ், நிஷாந்த் ஆகியோா் 4 தங்கப் பதக்கங்களை வென்றனா்.
இந்த மாணவா்களுக்கு பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில், தாளாளா் பெருமாள், துணைத் தாளாளா் கண்ணன் பெருமாள், முதல்வா் சிலம்பரசன் மற்றும் ஆசிரியா்கள் பரிசுகள் வழங்கி பாராட்டினா்.