செய்திகள் :

Canada: இந்தியா - கனடா தூதர்கள் நியமனம்; மீண்டும் துளிர்க்கும் உறவு!

post image

2023-ம் ஆண்டு, கனடாவைச் சேர்ந்த காலிஸ்தான் பிரிவினைவாத ஆர்வலர் நிஜ்ஜார் கொலை செய்யப்பட்டார்.

விரிசல் விழுந்த உறவு

இந்தக் கொலைக்கும் இந்திய அரசுக்கும் சம்பந்தம் உள்ளது என்று அப்போதைய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளிப்படையாக குற்றம்சாட்டினார்.

இதையடுத்து இரு நாடுகளுக்கும் இடையே இருந்த நீண்டகால நட்பில் விரிசல் விழுந்தது. ஒருகட்டத்தில், இரு நாடுகளுக்கும் இந்த விஷயத்தில் கடுமையான வார்த்தைப்போர்கள் ஏற்பட்டன.

இதன்விளைவாக, 2024-ம் ஆண்டு அக்டோபர் மாதம், இரு நாடுகளும் மாறி மாறி தூதர்களை நீக்கினலும், தங்களது தூதர்களைத் திரும்ப பெற்றன.

மோடி, ஜஸ்டின் ட்ரூடோ
மோடி, ஜஸ்டின் ட்ரூடோ

பிரதமர் ஆன மார்க் கார்னே

இன்னொரு பக்கம், கனடா நாட்டில் ஜஸ்டின் ட்ரூடோவின் ஆட்சிக்கு எதிரான குரல்கள் எழுந்தன. இதனால், ஜஸ்டின் ட்ரூடோ இந்த ஆண்டு ஜனவரி மாதம் தனது பதவியில் இருந்து விலகினார்.

இதனையொட்டி, கடந்த மார்ச் மாதம் நடந்த கனடாவின் நாடாளுமன்ற தேர்தலில் மார்க் கார்னே பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்தியா - கனடா உறவு

அதன் பின், அவர் இந்தியா-கனடா உறவை மீண்டும் வலுப்படுத்த கவனமாக செயலாற்றி வருகிறார். 2023-ம் ஆண்டு முதல் இருநாடுகளுக்கு இடையே விட்டுப்போன வர்த்தக பேச்சுவார்த்தைகள் இப்போது மீண்டும் தொடங்கியிருக்கின்றன.

நிஜ்ஜார் கொலை வழக்கை மிக கவனமாக கையாண்டு வருகிறார் கார்னே.

கடந்த ஜூன் மாதம் நடந்த பிரதமர் மோடி-கார்னே சந்திப்பு நல்லபடியாக முடிந்தது.

கிறிஸ்டோபர் கூட்டர்
கிறிஸ்டோபர் கூட்டர்

யார் யார் தூதர்கள்?

இந்த நிலையில், மீண்டும் இரு நாடுகளும் நேற்று தங்களது தூதர்களை அறிவித்துள்ளன.

தற்போது, இந்தியாவின் கனடா தூதராக கிறிஸ்டோபர் கூட்டர் நியமிக்கப்பட்டுள்ளார். வெளியுறவுத் துறை பணிகளில் கிட்டத்தட்ட 35 ஆண்டுகள் பணியாற்றி உள்ளார்.

இவர் இந்தியா, கென்யா, நமீபியா, துருக்கி, கம்போடியா உள்ளிட்ட நாடுகளில் ஏற்கெனவே பணியாற்றி உள்ளார்.

இந்திய அரசு சார்பில் விரைவில் தினேஷ் கே. பட்நாய்க் கனடாவின் இந்திய தூதராக பொறுப்பேற்பார் என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கனடாவில் அதிக அளவில் இந்தியர்கள் குடியேறி உள்ளனர். கிட்டத்தட்ட 10 மாதங்களுக்குப் பிறகு, பூமியில் வேரெடுத்து விட்டது போல் இரு நாட்டு உறவுகள் இன்னும் செழிக்கட்டும்.

Gujarat : 10 கட்சிகள்; 54,000 வாக்குகள்; 4300 கோடி நிதி - விசாரிக்குமா ECI? BJP DMK |Imperfect Show

* இந்திய சுதேசிப் பொருட்களையே வாங்க வேண்டும்" - எச்.ராஜா* 'இதைச் செய்தால் வரியைக் குறைப்போம்...' - அமெரிக்க வர்த்தக ஆலோசகர்ப் பீட்டர் நவரோ* இந்திய-அமெரிக்க உறவை ட்ரம்ப் நாசம் செய்கிறார்! - அமெரிக்க ஜன... மேலும் பார்க்க

``விரைவில் சந்திப்பு; ஆனாலும், ரஷ்யா-உக்ரைன் மோதல்கள் தொடர்கின்றன'' - அமெரிக்கா சொல்வதென்ன?

இந்த மாதம் 15-ம் தேதி அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - ரஷ்ய அதிபர் புதின் சந்திப்பு நடந்தது.அடுத்ததாக, 18-ம் தேதி, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஐரோப்ப நாடுகளின் தலைவர்களுடன் அமெரிக்கா சென்று ட்ரம்பைச் சந்தித்தார... மேலும் பார்க்க

"புதிய பாஜக தலைவர் தேர்வு செய்யும் பணி; யார் முடிவெடுப்பது..!" - RSS தலைவர் மோகன் பகவத் சொன்ன பதில்

டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில், ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழா மூன்று நாள் கருத்தரங்கு தொடர் சொற்பொழிவுடன் நடைபெற்று வருகிறது. இதில் செய்தியாளர்களிடம் பேசி வரும் மோகன் பகவத், பல்வேறு கேள்விகளுக்குப் பதிலள... மேலும் பார்க்க

UK: நாடு முழுவதும் பாகிஸ்தான் பாலியல் வன்கொடுமை கும்பல் அட்டூழியம் - சுயேச்சை எம்.பி குற்றச்சாட்டு!

ஐக்கிய ராச்சியத்தில் சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினர் ரூபர்ட் லோவ் தனிப்பட்ட முறையில் நடத்திய விசாரணையில் குழந்தைகள் மீது பாலியல் வன்கொடுமை நடத்தும் கும்பல்கள் கண்டறியப்பட்டுள்ளன. நாடு முழுவதும் 85 அதிக... மேலும் பார்க்க