செய்திகள் :

GVM: "என்னுடைய ஒரு வெளிவராத படத்தின் மீது அவர் அதிக நம்பிக்கை வைத்திருக்கிறார்!'' - கெளதம் மேனன்

post image

இயக்குநர் லிங்குசாமியின் 'பெயரிடப்படாத ஆறுகள்' என்ற புதிய ஹைக்கூ கவிதைத் தொகுப்பை இன்று, முனைவர் கு. ஞானசம்பந்தன் தலைமையில், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் வெளியிட்டார். வெளியிடப்பட்ட நூலை நடிகை அபிராமி பெற்றுக்கொண்டார்.

`என்னை சிரிக்க வைக்கும் ஒருவர் லிங்குசாமி'

மேடையில் பேசத் தொடங்கிய இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், “லிங்குசாமி என்னோட நெருங்கிய நண்பர். நான் அவரின் அனைத்தும் விஷயங்களையும் ரசிப்பேன் என்று அவருக்குத் தெரியும்.

அதற்காகதான் இந்தப் புத்தகத்தை இன்று நான் வெளியிட்டிருக்கிறேன். நாங்கள் இருவரும் நிறைய விஷயங்களைப் பற்றி பேசுவோம். என்னை சிரிக்க வைக்கும் ஒருவர் லிங்குசாமி.

என்னுடைய ஒரு வெளிவராத படத்தின் மேல் அதிக நம்பிக்கை வைத்திருக்கிறார். அதற்காக நிறைய உதவிகளையும் அவர் செய்திருக்கிறார்.” என்றவர், புத்தகத்தில் தனக்குப் பிடித்த வரிகளை மேடையில் வாசித்தார்.

அவர், “‘தீக்குச்சியை உரசிய அதே கணத்தில் வானில் மின்னல்.’ எனக்கு 'ரன்' திரைப்படம் பார்த்த உணர்வை இந்தக் கவிதை கொடுத்தது. இந்த வரி எனக்கு ரொம்பவே பிடித்திருந்தது.

இதை ஒரு கதையாக எழுதி என் அடுத்த படத்தில் ஒரு காட்சியாக இதை எடுக்க வேண்டும் என எனக்கு ஆசை. எதற்கு என்னைக் கூப்பிட்டு இந்த நூலை வெளியிடச் சொன்னார்? இந்த வட்டத்தில் நிறைய பேர் இருக்கிறாரே என நான் சொல்லமாட்டேன்.

கெளதம் வாசுதேவ் மேனன்
கெளதம் வாசுதேவ் மேனன்

அவர் என்னுடைய நண்பர், நான்தான் இதை வெளியிட வேண்டும். நான் சிரித்துப் பழகி கருத்தைக் கவரும் ரசிகன் என்று என் நண்பனுக்குத் தெரியும். உங்களின் கவலை மறக்க கவிதை பாடுபவன் என் நண்பன் என்பதும் எனக்குத் தெரியும்.

லிங்குசாமியின் பேச்சில் அவ்வளவு சுவாரஸ்யம் இருக்கும். பஞ்ச் லைன் சொல்லி என்னைச் சிரிக்க வைப்பார். என்னுடைய நலனில் மிகுந்த அக்கறைக் கொண்டவர் லிங்குசாமி.

என்னுடைய வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் வகையில் இதில் சில கவிதைகள் இருந்தன. உதாரணத்திற்கு, ‘சிறிய வட்டம் நிலா, பெரிய வட்டம் வானம், கிணற்றுத் தவளைக்கு...’ என இதில் ஒரு கவிதை இருக்கிறது. என்னுடைய வாழ்க்கையில் நிகழும் ஒரு விஷயமாக நான் இதைப் பார்க்கிறேன். இதில் கிணற்றுத் தவளை நான்தான்.” என்றார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

வங்கி மோசடி வழக்கில் 29 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பு; 9 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை!

சுஜாதா பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் ஜி.வி. பிலிம்ஸ் லிமிடெட் நிறுவனங்களின் சார்பில், இயக்குநர் மணிரத்னத்தின் அண்ணனும், பிரபல திரைப்பட தயாரிப்பாளருமான ஜி. வெங்கடேசுவரன் போலி ஆவணங்களை தயாரித்து, ர... மேலும் பார்க்க

Vishal: ``எனக்கும், சாய் தன்ஷிகாவிற்குமான நிச்சயதார்த்தம் சிறப்பாக நடந்து முடிந்தது" - விஷால்!

என்று இன்று தனது 48-வது பிறந்த நாளையொட்டி சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தேவாலயத்தில் பிரார்த்தனையை முடித்துவிட்டு ஆதரவற்ற, முதியோர் இல்லத்தில் கேக் வெட்டி, விருந்து கொடுத்த நடிகர் விஷால், "எப்போது திர... மேலும் பார்க்க

'இன்று பிற்பகல் நல்ல செய்தியை அறிவிக்கிறேன்'- திருமணம் குறித்த கேள்விக்கு விஷால் அளித்த பதில் என்ன?

நடிகர் விஷால் தனது 48-வது பிறந்தநாளை சென்னையில் இன்று (ஆகஸ்ட்29) ஆதரவற்றோர் மற்றும் முதியோருடன் கொண்டாடி இருக்கிறார்.அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம் திருமணம் குறித்த கேள்வி எழுப்பப்ட்டது. அத... மேலும் பார்க்க

What to watch - Theatre & OTT: Lokah, Hridayapoorvam, குற்றம் புதிது; இந்த வார ரிலீஸ் லிஸ்ட்

குற்றம் புதிது (தமிழ்)குற்றம் புதிதுஆம்ஸ்ராங் இயக்கத்தில் தருண் விஜய், கனிமொழி, நிழல்கள் ரவி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'குற்றம் புதிது'. க்ரைம் திரில்லரில் விருவிருப்பான திரைப்படமா... மேலும் பார்க்க