செப். 9-ல் ஐஃபோன் 17 அறிமுகம்! விலை குறையும் பழைய ஐஃபோன் மாடல்கள்!!
வங்கி மோசடி வழக்கில் 29 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பு; 9 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை!
சுஜாதா பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் ஜி.வி. பிலிம்ஸ் லிமிடெட் நிறுவனங்களின் சார்பில், இயக்குநர் மணிரத்னத்தின் அண்ணனும், பிரபல திரைப்பட தயாரிப்பாளருமான ஜி. வெங்கடேசுவரன் போலி ஆவணங்களை தயாரித்து, ரூ.10.19 கோடி வங்கி மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.
இதன் அடிப்படையில், 1996-ம் ஆண்டு சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா நுங்கம்பாக்கம் கிளை, சி.பி.ஐ-யிடம் புகார் அளித்தது. இந்தப் புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த சி.பி.ஐ, 1988 முதல் 1992 வரையிலான காலத்தில் நடந்த இந்த மோசடி தொடர்பாக, 2000-ம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
அதில், ஜி. வெங்கடேசுவரன் உள்ளிட்ட வங்கி அதிகாரிகள் தங்களின் பதவியை துஷ்பிரயோகம் செய்து வங்கியை நஷ்டத்திற்கு உள்ளாக்கியதாகக் கூறப்பட்டது.

இதற்கிடையில், ஜி. வெங்கடேசுவரன் 2003-ம் ஆண்டு மே 3-ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கு சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், வங்கி மோசடி வழக்கில் 29 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பு வழங்கப்பட்டது.
அந்தத் தீர்ப்பில், குற்றம் சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டனர். எனினும், வெங்கடேசுவரன் உள்ளிட்ட நால்வர் உயிரிழந்துவிட்டதால், அவர்கள்மீதான குற்றச்சாட்டுகள் ரத்து செய்யப்பட்டன. முக்கிய குற்றவாளிகளுக்கு 9 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...