ஐஐடியில் 28 அரசுப் பள்ளி மாணவர்கள்: "திராவிட மாடல் அரசின் பொய்" - என்ன சொல்கிறார...
மாதம்பட்டி ரங்கராஜ்: "கருவைக் கலைக்கச் சொல்லி அடித்துத் துன்புறுத்தினார்" - ஜாய் கிறிசில்டா புகார்
கோவை மாதம்பட்டியைச் சேர்ந்தவர் ரங்கராஜ். சமையல் கலைஞராக இருந்து நடிகராகவும் மாறியவர். இவருக்கு ஸ்ருதி என்பவருடன் சில வருடங்களுக்கு முன் திருமணம் நடைபெற்று இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்.
ஆனால் கடந்த சில வருடங்களாக கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு என்றும் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறார் என்றும் கூறப்பட்டது.
இவர்களுக்கு விவாகரத்து ஆகி விட்டதா என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

இந்த நிலையில், மாதம்பட்டி ரங்கராஜ் தனது ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிறிசில்டாவைத் திருமணம் செய்து கொண்டதாக செய்திகள் வெளியானது.
ஜாய் கிறிசில்டா, ரங்கராஜ்தான் தன்னுடைய கணவர் எனப் பொதுவெளியில் பகிர்ந்து வந்தார். தனக்கு ரங்கராஜ் குங்குமம் வைக்கும் புகைப்படங்களையும் வெளியிட்டிருந்தார்.
மேலும், தான் 6 மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும், இந்த ஆண்டு குழந்தை வரப்போவதாகவும், 'Baby loading 2025 We are pregnant 6th month of pregnancy' எனவும் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், ஜாய் கிறிசில்டா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "ஒன்றைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். சில வாழ்க்கைப் பயணத்தை அமைதியாகத் தொடங்க வேண்டியிருக்கிறது.
கண்ணியத்துடனும், மிகுந்த அன்புடனும் நானும், ரங்கராஜ் அவர்களும் கடந்த சில ஆண்டுகளாகவே கணவன் - மனைவியாக எங்கள் வாழ்க்கையைத் தொடங்கிவிட்டோம்.
எங்கள் அன்பின் அடையாளமாக இந்த ஆண்டு எங்களுக்குக் குழந்தை பிறக்கப் போகிறது" என்றும் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் இதுகுறித்து நாம் மாதம்பட்டி ரங்கராஜிடம் தொடர்புகொண்டு பேசியிருந்தோம். அப்போது, ``பொது வெளியில், அதாவது குறிப்பாக சமூக ஊடகங்களில் வரும் தகவல்கள் குறித்து எனக்குத் தெரியும்.
என் வாழ்க்கை தொடர்பான எல்லா கேள்விகளுக்கும் என்னால் பதில் சொல்ல முடியாது. சில விஷயங்கள் என் தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பானது.
அது குறித்து நான் ஏன் பேச வேண்டும்? அதேநேரம் அவசியம் பேசியாக வேண்டும் என்கிறபோது நானே தெளிவாகப் பேசுவேன்.
என் குடும்பத்தில் எந்தப் பிரச்னையும் இல்லை. ரொம்ப பர்சனலான விஷயங்கள் எதைப் பற்றியும் இப்போது பேச விரும்பவில்லை" என முடித்துக் கொண்டார்.
இந்த நிலையில், சென்னை கமிஷனர் அலுவலகத்தில் மாதம்பட்டி ரங்கராஜின் ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிறிசில்டா புகார் மனு அளித்திருக்கிறார்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஜாய் கிறிசில்டா, ``நானும் மாதம்பட்டி ரங்கராஜும் சில வருடங்களாக திருமணம் முடிக்காமல் ஒன்றாக இருந்தோம்.
அதன்பிறகுதான் எம்.ஆர்.சி நகர் அம்மன் கோயிலில் திருமணம் செய்துகொண்டோம். ஆனால், எங்கள் திருமணத்தைப் பதிவு செய்யவில்லை.

நான் எங்கள் திருமணம், குழந்தை உருவாகியிருப்பது குறித்து வெளியே சொன்னதற்குப் பிறகு மாதம்பட்டி ரங்கராஜ் என்னைச் சந்தித்தார்.
கருவைக் கலைக்கச் சொல்லி என்னை அடித்துத் துன்புறுத்தினார். நான் முடியாது என மறுத்துவிட்டேன். அதன் பிறகு கடந்த ஒரு மாதமாக அவர் எங்கே இருக்கிறார் என்றே தெரியவில்லை.
அவருக்குத் திருமணம் முடிந்துவிட்டது என்பதே எனக்குத் தெரியாது. எனக்கு அவருடன் சேர்ந்து வாழ வேண்டும். அவருடன் என்னைச் சேர்த்து வைக்க வேண்டும் என மனு அளித்திருக்கிறேன்" என்றார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...