Guar: இந்தியா உற்பத்தி செய்யும் கொத்தவரங்காய்க்கு அமெரிக்காவில் டிமாண்ட்; எதற்கு...
ஏமாற்றிவிட்டார் மாதம்பட்டி ரங்கராஜ்: ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா பரபரப்பு புகார்
தன்னை ஏமாற்றி விட்டதாக மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா சென்னை பெருநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.
ஜாய் கிரிஸில்டா தனது புகாரில், “ரங்கராஜ் எனது கணவர். எம்.ஆர்.சி. நகர் கோயிலில் திருமணம் செய்து கடந்த இரண்டு ஆண்டுகளாக இணைந்து வாழ்ந்து வந்தோம். ஆனால் கடந்த இரண்டு மாதங்களாக அவர் என்னை விட்டு விலகி விட்டார். என்னிடம் தொடர்பை முற்றிலும் துண்டித்துள்ளார்.
நான் அவரை நேரில் சந்திக்க முயன்றபோது, இரண்டு முறையும் என்னை அடித்து விரட்டியுள்ளார். தொடர்ந்து அவருடன் பேச முயன்றும், அவருடைய நண்பர்கள் என்னை சந்திக்க விடாமல் தடுக்கின்றனர்.
இப்போது என் வயிற்றில் வளரும் குழந்தைக்கு ரங்கராஜ்தான் தந்தை. எனக்கும் என் குழந்தைக்கும் நேர்ந்த இந்த ஏமாற்றத்திற்கு அவர் பொறுப்பேற்க வேண்டும். அவர் என்னுடன் சேர்ந்து வாழ போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
6 மாதகால கர்ப்பம்! இரண்டாவது திருமணம் செய்தாரா மாதம்பட்டி ரங்கராஜ்?
முக்கிய அரசியல் பிரமுகர்கள், திரை பிரபலங்கள், முன்னணி நட்சத்திரங்கள் என பல்வேறு முக்கியஸ்தர்களின் இல்ல விழாக்களில் ஆர்டர் எடுத்து, மாதம்பட்டி ரங்கராஜ் விருந்து ஏற்பாடு செய்து வருகிறார். மேலும் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் நடுவராகவும் இருந்து வருகிறார்.
இவருக்கும் ஸ்ருதி என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணமாகி இரு குழந்தைகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.