`StartUp' சாகசம் 38: `முதுகுவலிக்காக ஒரு ஸ்டார்ட்அப் தொடங்கியது ஏன்?’ - அ. முகமத...
தமிழகத்தில் 9 காவல்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம்
பல்வேறு நிர்வாகக் காரணங்களுக்காக, தமிழகத்தில் ஒன்பது காவல்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இன்று தமிழ்நாட்டில் பணியில் உள்ள ஒன்பது ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசின் கூடுதல் முதன்மைச் செயலர் தீரஜ் குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அந்த உத்தரவில், சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜியாக இருந்த லட்சுமி ஊழல் தடுப்புப் பிரிவு ஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜியாக அனிஷா உசேன் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை கிழக்கு இணை ஆணையராக இருந்த விஜயகுமார் ஐபிஎஸ்,தெற்கு போக்குவரத்து காவல்துறை இணை ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை கிழக்கு இணை ஆணையராக பாண்டி கங்காதர் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை மாநகர போக்குவரத்துப் பிரிவு வடக்கு இணை ஆணையராக சோனல் சந்திரா நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை குற்றப்பிரிவு சிஐடி காவல் கண்காணிப்பாளராக இருந்த ஜவகர், சென்னை குற்றப்பிரிவு சிஐடியில் புதிதாக உருவாக்கப்பட்ட மெட்ரோ மண்டல காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கோவை காவல் தலைமையக துணை ஆணையராக இருந்த சுகாசினி ஐபிஎஸ் சென்னை மேற்கு மண்டல போக்குவரத்து இணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
காவல்துறை கண்காணிப்பாளராக பதவி உயர் பெற்று, சென்னை குற்றப்பிரிவு சிஐடி காவல் கண்காணிப்பாளராக பி.எச். ஷாஜிதா நியமிக்கப்பட்டுள்ளார்.
கோவை காவல் தலைமையக துணை ஆணையராக திவ்யா நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.