செய்திகள் :

Guar: இந்தியா உற்பத்தி செய்யும் கொத்தவரங்காய்க்கு அமெரிக்காவில் டிமாண்ட்; எதற்குத் தெரியுமா?

post image

இந்தியாவில் அதிகமாக விளைவிக்கப்படும் கொத்தவரங்காய், உலக சந்தையில் தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ளது. அமெரிக்காவில் கொத்தவரங்காய்க்கு அதிக டிமெண்ட் இருப்பதாக பிபிசியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொத்தவரங்காயிலிருந்து பிசின் தயாரிக்கப்படுகிறது.

இந்தக் கொத்தவரை பிசின் (Guar Gum), உணவுப் பொருட்கள், மருந்துகள், காகிதம், துணி, அழகு சாதனப் பொருட்கள் ஆகிய துறைகளில் மட்டுமல்லாமல், பெட்ரோலியத் துறையிலும் பயன்படுத்தப்படுகிறது.

பாகிஸ்தான், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சீனா மற்றும் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளிலும் கொத்தவரங்காய் பயிரிடப்பட்டாலும், உலகின் 80 சதவிகித உற்பத்தி இந்தியாவில்தான் நடைபெறுகிறது.

Guar | கொத்தவரங்காய்
Guar | கொத்தவரங்காய்

அதில், ராஜஸ்தான் மாநிலம் மட்டும் 72 சதவிகித பங்கைக் கொண்டுள்ளது. குஜராத், ஹரியானா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகம், உத்தரப் பிரதேசம், பஞ்சாப் ஆகிய இடங்களிலும் இந்தப் பயிர் வளர்க்கப்படுகிறது.

ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் பயிரிடப்பட்ட கொத்தவரங்காய், அக்டோபர்-நவம்பர் மாதங்களில் அறுவடைக்கு வருகிறது.

புதை படிவ எரிபொருள் (Fossil Fuel) எடுக்கும் தொழிலில் கொத்தவரை பிசின் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக, ஷேல் வகை பாறைகளிலிருந்து ஹைட்ராலிக் ஃப்ராக்சரிங் (Hydraulic Fracturing) என்ற செயல்முறையைப் பயன்படுத்தி பூமியிலிருந்து எரிவாயு மற்றும் கச்சா எண்ணெய்யை எடுக்க இது பயன்படுத்தப்படுவதாக பிபிசியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்றுமதியில் முன்னிலை

இந்தியாவில் உற்பத்தியாகும் கொத்தவரை பிசினில் சுமார் 90 சதவிகிதம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் (APEDA) வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, 2023-24 ஆம் ஆண்டில் மட்டும் இந்தியா 4,17,674 மெட்ரிக் டன் கொத்தவரை பிசினை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது.

அமெரிக்காவின் மிகப்பெரிய தேவை

இந்தியாவின் கொத்தவரை பிசினின் மிகப்பெரிய நுகர்வோராக அமெரிக்கா திகழ்கிறது. இதுதவிர, ஜெர்மனி, ரஷ்யா, நார்வே, நெதர்லாந்து உள்ளிட்ட பல நாடுகளுக்கும் இந்தியாவிலிருந்து கொத்தவரை பிசின் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

உலகின் பெரும்பாலான நாடுகளுக்கு அவசியமான கொத்தவரை பிசின் உற்பத்தியில் இந்தியா முன்னணியில் இருப்பது, விவசாயிகளுக்குப் பொருளாதாரப் பலன்களை மட்டுமல்லாமல், நாட்டின் ஏற்றுமதி வருமானத்தையும் அதிகரிக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

`StartUp' சாகசம் 38: `முதுகுவலிக்காக ஒரு ஸ்டார்ட்அப் தொடங்கியது ஏன்?’ - அ. முகமது சலீம் சொல்வதென்ன?

Alshifa Spine Ayush`StartUp' சாகசம் 38முதுகு வலி உலகளவில் அதிக அளவில் மக்களை பாதிக்கும் ஒரு உடல்நலப் பிரச்னையாகும். இது எந்த வயதினரையும் பாதிக்கலாம். குறிப்பாக, வேலை செய்யும் வயதினர் மத்தியில் இது மிக... மேலும் பார்க்க

GRT: தமிழ்நாடு சிறுநீரக ஆராய்ச்சி அறக்கட்டளைக்கு 1 கோடி ரூபாய் வழங்கிய ஜி.ஆர்.டி ஜூவல்லர்ஸ்

இந்தியாவின் முன்னணி நகை நிறுவனங்களில் ஒன்றான ஜிஆர்டி Jewellers தங்கள் வணிக ரீதியான வளர்ச்சியையும் தாண்டி, இந்த சமூகத்திற்கு தாங்கள் அளிக்கும் பங்களிப்பு மற்றும் தாக்கத்தை மதிப்பிட வேண்டும் என்பதை மீண்... மேலும் பார்க்க

9K Gold: பிரபலமாகும் 9K தங்க நகைகள்; 22K தங்கத்திற்கு மாற்றா? விலை, தரத்தில் என்ன வித்தியாசம்?

கடந்த சில மாதங்களாக தங்க விலை வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்து வருகிறது. அமெரிக்கா தங்க கட்டிகளுக்குச் சுங்கவரி விதித்தது இதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது. இதனால் தங்கம் வாங்கும் வாடிக்கையாளர்கள் சிரம... மேலும் பார்க்க

Adani: இந்தியாவின் மிகப்பெரிய கோடீஸ்வரர் முகேஷ் அம்பானி; இரண்டாவது அதானி; இவர்களின் சொத்து எவ்வளவு?

இந்தியாவில் மிகப்பெரிய பணக்காரர் யார் என்பதில் முகேஷ் அம்பானிக்கும், அதானிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.முகேஷ் அம்பானி ஆயில், மொபைல், சில்லறை வர்த்தகம் போன்றவற்றில் கொடி கட்டி பறக்கிறார். அதானி... மேலும் பார்க்க

நீலகிரி: `மாதச் சந்தை-ன்னா அரவங்காடு தான்..!' - 8th Day மார்க்கெட் ரவுண்ட் அப்!

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகில் அரவங்காடு பகுதியில் மாதம் 8 ஆம் தேதி ஒரு நாள் மட்டும் பல மாவட்டங்களில் இருந்து வியாபாரிகளும் பல ஊர்களில் இருந்து பொதுமக்களும் வருகின்றனர்.அந்த ஒரு நாள் நடக்கும் சந்தையில... மேலும் பார்க்க