FASTag Annual Pass: ரூ.3,000-க்கு கட்டணமில்லா பயணம்; விண்ணப்பிப்பது எப்படி? | How to Apply Toll Pass
ரூ.3,000 கட்டி டோல் பாஸ் பெற்றால் போதும். ஓராண்டுக்கு தேசிய நெடுஞ்சாலைகளில் கட்டணமின்றி பயணம் செய்துகொள்ளலாம் என்கிற நடைமுறை கடந்த 15-ம் தேதி முதல் வந்துள்ளது.
அந்தப் பாஸ் பெறுவது எப்படி என்பதைத் தெரிந்துகொள்ளலாம்... வாங்க...
தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையத்தின் ராஜ்மார்க் யாத்ரா (Rajmarg Yatra) என்கிற ஆப்பை டௌன்லோடு செய்துகொள்ளவும்.
அடுத்ததாக, உங்களது மொபைல் எண் அல்லது வாகனப் பதிவு எண்ணை உள்ளிட்டு லாக் இன் செய்து கொள்ளவும்.

நீங்கள் இந்த ஆப்பிற்குள் லாக் இன் செய்ய மூன்று கண்டிஷன்கள் உள்ளன.
ஒன்று, நீங்கள் இந்த ஆப்பைப் பதிவு செய்யும்போது, உங்களது வாகனப் பதிவு எண்ணோடு இணைக்கப்பட்டிருக்கும் ஃபாஸ்ட் டேக் ஆக்டிவாக இருக்க வேண்டும்.
இரண்டு, ஒருவேளை சேஸ் எண்ணோடு மட்டும் உங்களது ஃபாஸ்ட் டேக்கை இணைத்திருந்தீர்கள் என்றால், உங்களது ஃபாஸ்ட் டேகில் வாகனப் பதிவு எண்ணை உடனே அப்டேட் செய்துவிடுங்கள். அதன் பின், ஆப்பில் உங்களது தகவல்களைப் பதிவிடுங்கள்.
இந்த ஃபாஸ்ட் டேக் கார், ஜீப் போன்ற தனிப்பட்ட வாகனங்களுக்கு மட்டுமே. வணிக வாகனங்களுக்கு இல்லை என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.
3. ராஜ்மார்க் யாத்ரா ஆப்பில் பதிவு செய்ததும், அதில் கேட்கப்படும் வாகன தகவல்கள் மற்றும் தற்போதைய ஃபாஸ்ட் டேக் தகவல்களை உள்ளீடு செய்துகொள்ளுங்கள்.
பின்னர், ஆர்.சி, டிரைவரின் அடையாள அட்டை, முகவரி சான்றிதழ், பாஸ்போர்ட் புகைப்படம் போன்ற ஆவணங்களை அப்லோடு செய்யவும்.
4. அடுத்ததாக, ரூ.3,000-வை பேமென்ட் ஆப், டெபிட் அல்லது கிரெடிட் கார்டு பயன்படுத்திக் கட்டவும்.
வேலட் பேலன்ஸை இந்தக் கட்டணத்திற்குப் பயன்படுத்த முடியாது.

5. அடுத்த இரண்டு மணிநேரத்திற்குள் உங்களது ரூ.3,000 ஃபாஸ்ட் டேக் ஆக்டிவேட் ஆகிவிடும். சில நேரங்களில் 24 மணிநேரம் கூட பிடிக்கிறது. அதனால், முடிந்தளவு, நீங்கள் பேமென்ட் செய்த ரெசிப்டைப் பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள். இது பின்னர் உதவலாம்.
6. இந்த ஆப்பில் இன்னும் சில தொழில்நுட்ப கோளாறுகள் உள்ளன. அதனால், இன்டர்நெட் வசதி நன்கு இருக்கும் இடத்தில், பேமென்ட் செய்யுங்கள். எந்தச் சிக்கலும் எழாமல் இருக்க, ஆவணங்களைப் பக்காவாக அப்லோடு செய்யுங்கள்.
என்னென்ன நிபந்தனைகள்?
ஓராண்டு அல்லது முதல் 200 டிரிப்கள் - இதில் எது முதலில் வருகிறதோ, அதுவரை தான் இந்த ரூ.3,000 பாஸ் செல்லுபடி ஆகும். அதற்கு மேல், மீண்டும் ரீசார்ஜ் செய்ய வேண்டும்.
திருச்சியில் இருந்து சென்னை செல்லும் வழியில் ஏழு சுங்கச்சாவடிகள் இருக்கின்றன. இதில் நீங்கள் ஒவ்வொரு சுங்கச்சாவடிகளைக் கடக்கும்போதும், ஒரு டிரிப்பாகக் கணக்கிடப்படும். ஆக, மொத்தம் இந்தப் பயணம் உங்களுக்கு ஏழு டிரிப்பாகக் கணக்கிடப்படும். இப்படி 200 டிரிப்கள் முடிந்தால், மீண்டும் ரீசார்ஜ் செய்ய வேண்டும்.
Business, Money, Invest, Personal Finance தொடர்பான Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://chat.whatsapp.com/IdbC2MFyIM6E5EHRomv2l4
வணக்கம்,
Personal Finance, மியூச்சுவல் ஃபண்ட், பங்குச்சந்தை, முதலீடு, சேமிப்பு போன்றவைகளில் பக்கா அப்டேட்டுகளும், ஆலோசனைகளும்.
கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...