Mohammed Shami: "எனக்கு ஒரேயொரு நிறைவேறாத கனவு இருக்கு" - மனம் திறந்த முகமது ஷமி
விஷ்ணு விஷாலின் ஆர்யன் வெளியீட்டுத் தேதி!
நடிகர் விஷ்ணு விஷாலின் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஆர்யன்’ திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஷ்ணு விஷால், இறுதியாக நாயகனாக நடித்து கடந்த 2022 ஆம் ஆண்டு ”கட்டா குஸ்தி” எனும் திரைப்படம் வெளியானது.
அதன்பின்னர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், ஐஷ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய ”லால் சலாம்” மற்றும் ”ஓஹோ எந்தன் பேபி” ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில், இயக்குநர் பிரவீன் இயக்கத்தில், நடிகர் விஷ்ணு விஷால் தயாரித்து நாயகனாக நடித்துள்ள புதிய திரைப்படமான “ஆர்யன்” வரும் அக்டோபர் 31 ஆம் தேதி உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் வெளியாகும் எனப் படக்குழு இன்று (ஆக.29) அறிவித்துள்ளது.
நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகர் விஷ்ணு விஷால் நாயகனாக நடித்துள்ள இப்படம் வெளியாகவுள்ளது, அவரது ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
இதையும் படிக்க: பாம் திரைப்பட டிரைலர்!