"விக்கெட் எடுத்த பிறகும் தோனி என்னைத் திட்டிக் கொண்டே இருந்தார்" - அனுபவம் பகிரு...
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரிப்பு!
புதுதில்லி: அமெரிக்கா வரி விதிக்கப்படுவதற்கு முன்பு, முதல் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8 சதவிகிதம் வளர்ச்சியடைந்தாக தெரிவிப்பு.
நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியானது விவசாயத் துறையின் ஏற்பட்ட செயல்திறனே என்றது தரவு. அதே வேளையில், ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலகட்டத்தில் சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 5.2 சதவிகிதமாக இருந்ததால், இந்தியா வேகமாக வளர்ந்து வரும் முக்கிய பொருளாதாரமாக இருந்தது. இந்நிலையில், முந்தைய அதிகபட்ச மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 2024 ஜனவரி முதல் மார்ச் வரையான மாதங்களில் இது 8.4 சதவிகிதமாக இருந்தது.
இன்று வெளியிடப்பட்ட தேசிய புள்ளிவிவர அலுவலகம் தரவுகளின்படி, 2024-25ல் ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலகட்டத்தில் விவசாயத் துறை 1.5 சதவிகிதத்திலிருந்து 3.7 சதவிகித வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இருப்பினும், உற்பத்தித் துறை வளர்ச்சியானது 2026ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் 7.7 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. இதுவே அதன் முந்தைய ஆண்டின் இதே காலத்தில் இது 7.6 சதவிகிதமாக இருந்தது.
இந்த மாத தொடக்கத்தில், ரிசர்வ் வங்கியானது 2025-26 ஆம் ஆண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியை 6.5 சதவிகிதமாகக் கணித்திருந்தது. இது முதல் காலாண்டு 6.5 சதவிகிதமாகவும், இரண்டாவது காலாண்டு 6.7 சதவிகிதமாகவும், மூன்றாவது காலாண்டு 6.6 சதவிகிதமாகவும், நான்காவது காலாண்டு 6.3 சதவிகிதமாகவும் இருக்கும் என்று கணித்திருந்தது.
இதையும் படிக்க: டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 61 காசுகள் சரிந்து ரூ.88.19 ஆக நிறைவு!