வெள்ளத்தில் மூழ்கிய 1,700 பாகிஸ்தான் கிராமங்கள்! 22 பேர் பலி..10 லட்சம் பேர் வெள...
ஹீரோவின் இரண்டு புதிய பைக்குகள்! குறைந்த விலையில்...
ஹீரோ நிறுவனம் மேம்படுத்தப்பட்ட கிளாமர் எக்ஸ் மற்றும் எக்ஸ்ட்ரீம் 125 ஆர் பைக்குகளை அறிமுகம் செய்துள்ளது.
இந்த இரண்டு மாடல் பைக்குகளும் 124.7 சி.சி. என்ஜின்களை கொண்டுள்ளது. 115 குதிரை திறனையும் 10.5 என்.எம். டார்க்கையும் வெளிப்படுத்தும்.
கிளாமர் எக்ஸ் 125
ரைடு பை வயர் தொழில்நுட்பத்தில் பவர், ரோடு, எக்கோ ஆகிய மூன்று டிரைவ் மோட்கள் உள்ளது. ப்ளூ டூத் இணைப்பு வசதியுடன் பல வண்ண டிஸ்பிளே இடம்பெற்றுள்ளது. 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் உள்ளது.
இருக்கைக்கு அடியில் ஸ்டோரேஜ் ஸ்பேஸ் வழங்கப்பட்டுள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 65 கி.மீ. பயணிக்க முடியும் என ஹீரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
அலாய் சக்கரங்களுடன் டிரம்ப் பிரேக் மற்றும் டிஸ்க் பிரேக் ஆகிய இரு வேரியண்ட்டுகளும் விற்பனைக்கு வந்துள்ளது. நெக்ஸல் ப்ளூ, சில்வர், சிவப்பு - சில்வர், கருப்பு - நீலம், கருப்பு - சிவப்பு ஆகிய நிறங்களில் கிடைக்கிறது.
இந்த பைக்கின் ஆரம்ப விலை ரு. 90.000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
எக்ஸ்ட்ரீம் 125 ஆர்
ஹீரோ நிறுவனத்தின் எக்ஸ்ட்ரீம் 125 ஆர் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சிங்கிள் சீட் வேரியண்டாக சந்தைக்கு வந்துள்ளது.
5 ஸ்பீடு கியர் பாக்ஸ், சிங்கிள் சேனல் ஏ.பி.எஸ். இடம் பெற்றுள்ளது.
கருப்பு, சிவப்பு - சில்வர், நீலம் - சில்வர் ஆகிய நிறங்களில் சந்தைக்கு வந்துள்ளது. இந்த மாடலின் ஆரம்ப விலை ரூ. ஒரு லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.