செய்திகள் :

அதிமுக கட்சி விதிகளில் திருத்தம்: எதிர்த்து வழக்குத் தொடர அனுமதி ரத்து!

post image

சென்னை: அதிமுக கட்சி விதிகளில் திருத்தம் செய்ததை எதிர்த்து வழக்குத் தொடர அக்கட்சியின் தொண்டர்களுக்கு அனுமதியளித்த தனி நீதிபதியின் உத்தரவை சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளது.

அதிமுக கட்சி விதிகளில் திருத்தம் செய்ததை எதிர்த்து, அக்கட்சியின் தொண்டர்களான வழக்குரைஞர் ராம்குமார் ஆதித்தன், சுரேன் பழனிசாமி ஆகியோர், உரிமையியல் வழக்குத் தாக்கல் செய்ய அனுமதி கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

வழக்குரைஞர்கள் தாக்கல் செய்திருந்த மனுவில், அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டு, அதற்கேற்ப விதிகளில் திருத்தம் செய்தது, அதிமுகவின் சட்டத் திட்டங்களுக்கு எதிரானது என்று குறிப்பிட்டிருந்தனர்.

இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி, அதிமுக கட்சி விதிகளில் திருத்தம் செய்ததை எதிர்த்து வழக்குத் தொடர அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்து, இன்று தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் அனிதா சுமந்த், செந்தில்குமார் அமர்வு, அதிமுக கட்சி விதிகளில் திருத்தம் செய்ததை எதிர்த்து, அதிமுக தொண்டர்கள் சார்பில் உரிமையியல் வழக்குத் தொடர அனுமதியளித்த தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

தீயணைப்புத் துறை ஆணையராக சங்கர் ஜிவால் நியமனம்!

தீயணைப்புத்துறை ஆணையராக முன்னாள் டிஜிபி சங்கர் ஜிவாலை நியமித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநா் (டிஜிபி) சங்கா் ஜிவால் இன்றுடன் பணி ஓய்வுபெறும் நிலையி... மேலும் பார்க்க

எட்டயபுரம் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: ஒருவர் பலி

எட்டயபுரம் அருகே பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் ஒருவர் பலியானார்.தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அருகே கருப்பூர் இனாம் அருணாசலபுரம் கிராமத்தில் ஜாஸ்மின் என்ற பெயரில் சிவகாசி பாறைப்பட்டியைச்... மேலும் பார்க்க

ஏமாற்றிவிட்டார் மாதம்பட்டி ரங்கராஜ்: ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா பரபரப்பு புகார்

தன்னை ஏமாற்றி விட்டதாக மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா சென்னை பெருநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.ஜாய் கிரிஸில்டா தனது புகாரில், “ரங்கராஜ் எனது கணவர். எம்.ஆர்.சி. ந... மேலும் பார்க்க

ஆற்றில் வீசப்பட்ட உங்களுடன் ஸ்டாலின் மனுக்கள்- எடப்பாடி பழனிசாமி கண்டனம்

உங்களுடன் ஸ்டாலின் என்ற பெயரில் பெறப்பட்ட மனுக்களை வைகை ஆற்றில் குப்பையாக வீசியுள்ளதாக அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், உங்களுடன் ஸ... மேலும் பார்க்க

இபிஎஸ் முதல்வராக வருவதற்கு அண்ணாமலை இதைச் செய்தாலே போதும்: செல்லூர் ராஜு

எடப்பாடி பழனிசாமி முதல்வராக வருவதற்கு அண்ணாமலை உயிரைக் கொடுக்க வேண்டாம் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். மதுரையில் அவர் செய்தியாளர்களுக்கு இன்று அளித்த பேட்டியில், எடப்பாடி பழனிசாம... மேலும் பார்க்க

தமிழகத்தில் 9 காவல்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம்

பல்வேறு நிர்வாகக் காரணங்களுக்காக, தமிழகத்தில் ஒன்பது காவல்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.இன்று தமிழ்நாட்டில் பணியில் உள்ள ஒன்பது ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசின்... மேலும் பார்க்க