செய்திகள் :

பஞ்சாப் வெள்ளம்: நிவாரண நிதிக்கு ஒரு மாத சம்பளத்தை வழங்கும் காங். எம்எல்ஏக்கள்!

post image

பஞ்சாப் மாநிலத்தில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக, அம்மாநில முதல்வர் நிவாரண நிதிக்கு, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் அனைவரும் தங்களது ஒரு மாத சம்பளத்தை வழங்குவதாக அறிவித்துள்ளனர்.

பஞ்சாபில், பெய்த கனமழையால் அங்குள்ள சட்லெஜ், ரவி உள்ளிட்ட நதிகளில் வெள்ளம் ஏற்பட்டு, ஏராளமான வீடுகள் மற்றும் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால், பாதிக்கப்பட்ட மக்களை மீட்டு, அவர்களுக்குத் தேவையான அத்தியாவசிய உதவிகளை அம்மாநில அரசு செய்து வருகின்றது.

இந்நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்குவதற்காக திரட்டப்படும் முதல்வர் நிவாரண நிதிக்காக, அம்மாநில காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் தங்களது ஒரு மாத சம்பளத்தை வழங்க முடிவு செய்துள்ளதாக, பஞ்சாப் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.எல்.ஏவுமான பஜ்வா தெரிவித்துள்ளார்.

முன்னதாக, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், அவரது அமைச்சரவை உறுப்பினர்கள் மற்றும் ஆம் ஆத்மி சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் தங்களது ஒரு மாத சம்பளத்தை வெள்ள நிவாரண நிதிக்காக வழங்குவதாகக் கூறியுள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள பஞ்சாப் மாநிலத்தில், அனைவரும் எந்தவொரு பிரிவிணையும் இன்றி ஒன்றிணைந்து நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளார்.

இதையும் படிக்க: ஜம்முவில் ரயில் சேவைகள் மூன்றாவது நாளாக நிறுத்தம்

All Congress MLAs in Punjab have announced that they will donate one month's salary to the Chief Minister's Relief Fund to help the flood-affected people.

ஸ்ரீநகரில்.. ஸ்பைஸ் ஜெட் விமானம் அவசர தரையிறக்கம்!

ஜம்மு - காஷ்மீரின் தலைநகர் ஸ்ரீநகரில், தில்லியில் இருந்து சென்ற ஸ்பைஸ் ஜெட் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தில்லியில் இருந்து ஸ்ரீநகர் நோக்கி, இன்று (ஆக.29) 4 குழந்தைகள் ம... மேலும் பார்க்க

உ.பி.யில் இருசக்கர வாகனத்தில் இருந்து பணத்தை தூக்கிச்சென்ற குரங்கு !

நிலப் பத்திரப் பதிவுக்காக இருசக்கர வாகத்தில் விவசாயி வைத்துச்சென்ற பண பையை குரங்கு எடுத்துச்சென்றதால் பரபரப்பு நிலவியது. உத்தரப் பிரதேச மாநிலம், டோண்டாபூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி ரோஹிதாஷ் சந்த... மேலும் பார்க்க

பானிபூரி விற்ற முன்னாள் ஐடி ஊழியர்.. கர்ப்பிணி மனைவி தற்கொலையில் மர்மம்!

கர்நாடகத்தில் பானிபூரி விற்பனையாளரின் வரதட்சணை கொடுமையால் 27 வயது கர்ப்பிணிப் பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் சுத்தகுண்டேபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பி... மேலும் பார்க்க

செய்யறிவுத் துறைக்குள் நுழைவது எப்படி? ரூ.3.36 கோடி சம்பளத்தை மறுத்த இளைஞர் பதில்!

செய்யறிவுத் துறைக்குள் நுழைவது எப்படி என்பது குறித்து ரூ.3.36 கோடி சம்பளத்தை மறுத்த இளைஞர் விளக்கம் கொடுத்திருக்கிறார்.மெட்டா நிறுவனத்தில் மெஷின் லேர்னிங் பொறியாளராகப் பணியாற்றும் இந்தியாவைப் பூர்வீகம... மேலும் பார்க்க

காயத்ரி மந்திரம் பாடி மோடியை வரவேற்ற ஜப்பானியர்கள்!

டோக்கியோ சென்ற பிரதமர் நரேந்திர மோடியை காயத்ரி மந்திரம் பாடி ஜப்பானிய பெண்கள் வரவேற்றனர்.15-ஆவது இந்தியா - ஜப்பான் உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக 2 நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை காலை... மேலும் பார்க்க

மகராஷ்டிரத்தில் கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு: பள்ளிகளுக்கு விடுமுறை!

மகாராஷ்டிரத்தின் லத்தூர் மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால், இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். மராத்வாடா மாவட்டத்தில் உள்ள 60 வருவாய் வட்டங்களில் ஆறுகள் மற்றும் ஓடைகளில்... மேலும் பார்க்க