`StartUp' சாகசம் 38: `முதுகுவலிக்காக ஒரு ஸ்டார்ட்அப் தொடங்கியது ஏன்?’ - அ. முகமத...
Ashwin: "வெளிநாடுகளில் ஜாலியாக கிரிக்கெட் விளையாட வேண்டும்" - அஷ்வின் சொல்லும் காரணம் என்ன?
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஓய்வு பெற்ற ரவிச்சந்திரன் அஷ்வின் தற்போது ஐபிஎல் தொடரிலும் ஓய்வை அறிவித்துவிட்டார்.
இந்நிலையில் தனது யூடியூப் சேனலில் அளித்த நேர்காணலில் கிரிக்கெட், ஓய்வு, அடுத்த கட்ட நகர்வு என்ன என்பது போன்ற பல விஷயங்களைப் பகிர்ந்திருக்கிறார்.

அந்த நேர்காணலில் பேசியிருக்கும் அவர், "யாருடைய விமர்சனங்களும் இன்றி, என் கடைசி சில கிரிக்கெட் ஆண்டுகளை நான் முழுமையாக அனுபவிக்க விரும்புகிறேன்.
என் வாழ்க்கையை என் விருப்பப்படி வாழ விரும்புகிறேன். வெளிநாடுகளுக்குச் சென்று ஜாலியாக கிரிக்கெட் விளையாட வேண்டும் என்று விரும்புகிறேன்.
அங்கு யாருக்குமே நம்மைப் பற்றித் தெரியாது. அதனால் ஜாலியாக என்ஜாய் பண்ணி கிரிக்கெட்டை விளையாடலாம். நம் ஏரியாக்களில் கிரிக்கெட் விளையாடிய மாதிரி குளோபல் அளவில் விளையாட ஆசைப்படுகிறேன்.

ஏற்கனவே ஒரு லீக்கில் விளையாடுவதற்கு ரெஜிஸ்டர் செய்து வைத்திருக்கிறேன். அந்த லீக்கில் விளையாட இருக்கிறேன்" என்று தெரிவித்திருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...